அஜித்திற்கு செம்ம மாஸாக வலிமை திரைப்படத்தில் பெயர் வைத்த இயக்குனர் எச்.வினோத்.? படத்தைப் பற்றி உண்மையை போட்டு உடைத்த மாஸ்டர் பட நடிகை.

ajith0

வெள்ளித்திரையில் பல வருடங்களாக தனது திரைப்பயணத்தில் பார்த்து பார்த்து ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியும் அசத்தலாக நடித்து வருபவர் தான் தல அஜித் இவரது திரைப்பயணத்தில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்தாலும் கடந்த சில வருடங்களாக மிகவும் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விட்டது

இதனைத்தொடர்ந்து தல அஜித் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் இன்னும் முடியாமல் இருக்கிறது இயக்குனர் எச் வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார் மேலும் இதில் ஹீமா குரோஷி தல அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தைப் பற்றி ஒரு தகவல் தற்போது சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது அதாவது மாஸ்டர் திரைப்படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சங்கீதா வலிமை திரைப்படத்திலும் நடித்துள்ளாராம்.

வலிமை திரைப்படத்தைப் பற்றி இவர் பல தகவல்களை கூறியதாக சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது அதாவது வலிமை திரைப்படத்தில் அஜித்தை பார்க்கும் பொழுது மிகவும் 15 வயது குறைத்து இளமையாக தெரிவார் என்றும் கஷ்டப்பட்டு ஜிம் ஒர்க் அவுட் செய்து உடல் எடையை மிகவும் பாதிக்கு பாதி குறைத்து விட்டார் எனவும் கூறியுள்ளாராம்.

ajith8
ajith8

அதுமட்டுமல்லாமல் அஜித்தின் திரைப்பயணத்தில் இது அவருக்கு ஒரு முக்கிய திரைப்படமாக அமையும் எனவும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் எச்வினோத் அஜித்தின் கதாபாத்திரத்திற்கு ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என பெயர் வைத்துள்ளதாகவும் ஆரம்பத்தில் இருந்தே இது ஒரு போலீஸ் கதையை தட்டித் தழுவி எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் எனவும் கூறியுள்ளார் என இந்த தகவல் மிக வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.