ஒரே வார்த்தையில் ரசிகர்களை அசர வைத்த ஹெச் வினோத்.! தில் ராஜ் இவரை பார்த்து கத்துக்கோங்க என கலாய்க்கும் ரசிகர்கள்…

thunivu
thunivu

சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச் வினோத். இவர் இயக்கிய முதல் படமே அசுர வெற்றி அடைந்ததால் அடுத்தடுத்த திரைப்படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அந்த வகையில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார் இயக்குனர் ஹெச் வினோத்.

அதன் பிறகு அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய இரண்டு படத்தையும் கொடுத்தார். தற்போது ஹெச் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் நாளைக்கு வெளியாக இருக்கிறது இதனால் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு வரவேற்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது அஜித் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானது.

அந்த வகையில் துணிவு திரைப்படத்திலும் அஜித் அவர்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இந்த படம் மங்காத்தா போல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள் இந்த நிலையில் துணிவு படத்தின் பிரமோஷனுக்காக இயக்குனர் ஹச் வினோத் அவர்கள் பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும் போது  அந்த பேட்டியில் நடிகை மற்றும் நடிகர்களின் பெயரை சுட்டிக்காட்டி இவர்களைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்கள். முதலில் சமந்தாவை பற்றி கேட்கும் போது  ஸ்மார்ட் என்று பதிலளித்தார். அதன் பிறகு நயன்தாராவை பற்றி கேட்கும் போது லேடி சூப்பர் ஸ்டார் என்று பதில் அளித்துள்ளார்.

இப்படி ஹீரோயின்களுக்கு ஏற்றவாறு ஒரே பதிலில் கூறிவந்த ஹச் வினோத்திடம் நடிகர்களை பற்றி கேட்டனர் அப்போது முதலில் நடிகர் சிவகார்த்திகேயனை பற்றி கேட்ட உடனே என்னுடைய சகோதரர் என்று கூறியுள்ளார் மேலும் விஜய் பற்றி கேட்டவுடன் ஒரு நல்ல எண்டர்டைனர் என்றும், ரஜினியை பற்றி கேட்ட உடனே மாஸ் எனவும் கமல் என்ற உடனே அறிவு எனவும் இயக்குனர் எச் வினோத் ஒரு வார்த்தையில் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இவருடைய அசத்தலான பதிலை கேட்டு அரங்கமே அதிர்ந்து உள்ளது அது மட்டும் இல்லாமல் ஹெச் வினோத் கூட்டணியில் மூன்று முறை நடித்துள்ள நடிகர் அஜித்தை பற்றி கேட்ட உடனே நம்பிக்கை உத்வேகம் என்று பதில் அளித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் இதுவரைக்கும் எந்த ஒரு பேட்டியில் மற்ற நடிகர்களை பற்றி கேட்கும் போது ஒரு வார்த்தை கூட குறைவாக கூறவில்லை என்றும் துணிவு மற்றும் வாரிசாகிய இரண்டு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்

ஆனால் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் அப்படி கிடையாது முழுக்க முழுக்க வாரிசு படத்திற்காக மட்டுமே சப்போர்ட் செய்து வந்தார் இதைப் பார்த்த ரசிகர்கள் தில் ராஜ் ஹெச் வினோத்தை பார்த்து கத்துக்கோங்க என்று கூறி வருகிறார்கள்.