தன்னுடைய புதிய படத்தின் ஹீரோவை முடிவு செய்த எச்.வினோத்.!

H.vinoth
H.vinoth

தமிழ் சினிமாவில் தற்பொழுது குறிப்பிடத்தக்க முக்கிய இயக்குனர்களில் ஒருவராக எச் வினோத் விளங்கி வரும் நிலையில் இவருடைய அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய மூன்று திரைப்படங்களையும் தொடர்ந்து இயக்கி பிரபலமானவர்தான் இயக்குனர் ஹெச் வினோத்.

இந்த மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் தற்போது அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் தன்னுடைய 62வது திரைப்படத்தில் இணைந்துள்ளார். அதேபோல் இயக்குனர் வினோத்தும் அடுத்ததாக கமலஹாசன் அல்லது தனுஷ் ஆகிய இருவர்களில் ஒருவரை வைத்து ஏதாவது திரைப்படத்தை இயக்குனர் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் கிட்டத்தட்ட எச் வினோத்தின் அடுத்த படத்தில் கமலஹாசன் அவர்கள் நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. தற்பொழுது வந்துள்ள தகவலின் படி சமீபத்தில் கமலஹாசன் அவர்களை எச். வினோத் சந்தித்துள்ளதாகவும் அந்த படத்தின் பணிகளை தொடங்க கமலஹாசன் அவர்கள் கூறியிருப்பதாகவும் எனவே ஆரம்ப கட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் குறித்த அறிவிப்புகள் வெளிவரும் எனவும் விரைவில் இந்த படத்தின் பூஜை உடன் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வினோத் அஜித்தை வைத்து இயக்கிய படங்களைப் போலவே இந்த படமும் சமூகத்தில் நடக்கும் பரபரப்பான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து வித்தியாசமான கதை அம்சத்துடன் படத்தை உருவாக்க முடிவு செய்துள்ளாராம். எனவே இப்படிப்பட்ட கதையில் கமலஹாசன் அவர்களுடன் எச் வினோத் இணைந்தால் படம் மாஸாக இருக்கும் என கூறப்படுகிறது.

கமலஹாசன் அவர்கள் தற்பொழுது சங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பது சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு முடிய இருப்பதாக கூறப்படுகிறது.