24 நேரமும் இதையே தான் நினைச்சுட்டு இருப்பியா எனக்கு டேட்..! இணையத்தை மிரட்டும் ஜிவி பிரகாஷின் பேச்சுலர் ட்ரைலர்..!

gv-prakash-2
gv-prakash-2

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் தான் நடிகர் ஜிவி பிரகாஷ்  இவர் ஆரம்பத்தில் இசையமைப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் ஆனால் பின்னர் நடிக்கும் ஆசை வந்தததன் பிறகு கதாநாயகனாகவும் பல்வேறு திரைப்படத்தில் நடித்து தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டி வருகிறார்.

இந்நிலையில் இவருடைய நடிப்பில் வருகிற டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் பேச்சுலர் இந்த திரைப்படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வந்தன.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஜிவி பிரகாஷ் நடிப்பது மட்டுமில்லாமல் நாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார் அந்தவகையில் இந்த ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்டது முழுக்க முழுக்க இவர்கள் இருவரும் இருக்கும் காட்சி மட்டுமே உள்ளது.

அந்த வகையில் இவர்கள் இருவருக்கு இடையே ஏற்படும் காதல்  மற்றும் மோதல் அதன் பின் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை மட்டுமே இந்த ட்ரைலரில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த ட்ரைலரை பார்த்த பின் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த விட்டது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை சதீஷ் செல்வக்குமார் அவர்கள் தான் இயக்கி வருகிறார் மேலும் இசையமைப்பாளராக இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் மேலும் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வரன் படத்தொகுப்பாளராக சன் லோகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

gv-prakash-2
gv-prakash-2

பொதுவாக ஜிவி பிரகாஷ் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே காதல் சம்பந்தப்பட்ட திரைப்படமாக தான் அமைந்து வருகிறது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கொஞ்சம் வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படமாக இருப்பதன் காரணமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு கூடியது மட்டுமில்லாமல் ஜிவி பிரகாஷுக்கு இது வெற்றித் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது