அஜித் ரசிகருக்காக உதவி செய்த ஜிவி பிரகாஷ்.! என்ன உதவி தெரியுமா.. குவியும் பாராட்டுக்கள்

gv-prakash
gv-prakash

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ் இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் ஜிவி பிரகாஷ் அவ போது சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ட்விட்டரில் உதவி கேட்ட மாணவர் ஒருவருக்கு ஜி வி பிரகாஷ் உதவி செய்துள்ள சம்பவம் தற்போது பலரால் பாராட்டு பெற்று வருகிறது. அதாவது அஜித் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு டேக்ஸ் செய்து உதவி கேட்டுள்ளார் அதில் நான் கோவையில் கல்லூரியில் படித்து வருகிறேன் பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து என்னுடைய கல்லூரி கட்டணத்தை செலுத்தி வந்துள்ளேன். அது மட்டும் இல்லாமல் எனக்கு தேவையான வேலவையும் செய்து வந்தேன்.

ஆனால் என்னுடைய அம்மாவின் உடல் நிலை சரியில்லாததால் தேர்வுக்கு கட்டவைத்து இருந்த பணத்தை என்னுடைய அம்மாவின் சிகிச்சைக்கு செலவு செய்து விட்டேன் இதனால் தேர்வு கட்டணம் செலுத்த பணம் இல்லை. எனவே உங்களால் முடிந்தால் எனக்கு உதவி செய்யுங்கள் அண்ணா என்று ஜீவி பிரகாஷிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இதனை அடுத்து அந்த மாணவரின் google pay நம்பரை வாங்கிய ஜி வி பிரகாஷ் அவ்கர்கள் அந்த மாணவரின் கல்வி கட்டணத்தை அனுப்பி வைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜி வி பிரகாஷ் அவர்கள் இது போல் கும்பகோணத்தில் பயிலும் ஒரு மாணவி தேர்வுக்கான பணம் கேட்டு உதவி செய்யுங்கள் அண்ணா என்று கூறியிருக்கிறார் அதேபோல நடிகர் ஜிவி பிரகாசம் உதவி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.