இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜிவி பிரகாஷிடம் ஒரு மாணவி தன்னுடைய கல்லூரி தேர்வுக்கு கட்டணம் இல்லாமல் தவித்து வருவதாகவும் எனக்கு உதவுங்கள் என்று கேட்டுள்ளார். உடனே நடிகர் ஜிவி பிரகாஷ் அவர்களும் உதவி செய்துள்ளார் இந்த தகவல் வெளியானவுடன் ரசிகர்கள் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றார்கள்.
தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்றது ஜிவி பிரகாஷ் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சமூக பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார். அந்த வகையில் இயற்கை பேரிடர் காலங்களில் தாமாகவே முன்வந்து மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார்.
மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு வேணும் இது தமிழர்களின் கலாச்சார விளையாட்டு என்று குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.
ஜிவி பிரகாஷ் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அதன் பிறகு உதவி என வருபவர்களுக்கு என்ன தேவையோ அதை சத்தமே இல்லாமல் உடனே செய்து முடித்து விடுவார்.
அப்படி கும்பகோணத்தைச் சேர்ந்த BCA படிக்கும் கல்லூரி மாணவி ஹேம பிரியா, தேர்வு விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் அதற்கான கட்டணம் தன்னிடம் இல்லை எனவும் ட்விட்டரில் ஜிவி பிரகாஷ் இடம் உதவி கோரி ட்விட் போட்டுள்ளார். இதைப் பார்த்த ஜிவி பிரகாஷ் உடனடியாக g pay மூலம் அந்த மாணவிக்கு தேவையான பணத்தை கொடுத்துள்ளார்.
அதன் பிறகு அந்த மாணவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜிவி பிரகாஷுக்கு நன்றி தெரிவித்தும், தனக்கு வாழ்த்தும்படி கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் ரசிகர்களும் ஜீவ பிரகாசுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். இது போன்ற பல சமூக பணிகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி வி பிரகாஷ்.