ஆடுபுலி ஆட்டத்தை ஆரம்பித்த ஜி வி பிரகாஷ்.! நடிச்ச படமே ரிலீஸ் ஆகல அதுக்குள்ள அடுத்ததா…

gv-prakash
gv-prakash

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் தற்போது நடிகராகவும் உருவெடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறது இதனை தொடர்ந்து தற்போது ஜிவி பிரகாஷ் அவர்கள் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியுள்ளார். இதை தொடர்ந்து ஜீவி பிரகாஷ் அவர்கள் நடிக்கும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலைகள் தற்போது ஜிவி பிரகாஷ் அவர்கள் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இடி முழக்கம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகமல் இருந்து வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து நடிகர் ஜிவி பிரகாஷ் அவர்கள் 13 என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்த இரண்டு படங்களும் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படத்தில் நடிகர் ஜீவி பிரகாஷ் அவர்கள் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது உதை மகேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீ வி பிரகாஷ் அவர்கள் தற்போது நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இன்னும் பெயரிடாதா இந்த திரைப்படத்தில் பல சினிமா பிரபலங்கள் நடிக்க உள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் நடித்து முடித்துள்ள இடி முழக்கம் மற்றும் 13 ஆகிய படங்கள் வெளிவராத நிலையில் அடுத்த படத்தில் கமிட்டாகி நடிக்க உள்ளார் ஜிவி பிரகாஷ்.

இதனிடையே நடிகர் ஜிவி பிரகாஷ் பல முகம் தெரியாத நபர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் சமீபத்தில்  ஒரு மாணவிக்கு தேர்வு கட்டணத்தை கூகுள் பேவில் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல திறமைகளை வைத்து சினிமாவில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருடைய இசைக்காகவும் படத்திற்காகவும் பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.