பிரிவை அறிவித்த சில நாட்களிலேயே கதறிய ஜிவி பிரகாஷ்.. சைத்தவி அப்படி என்ன சொன்னார் தெரியுமா…?

gv prakash tweet

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அவர்கள் தன்னுடைய மனைவி சைந்தவி என்பவறுடன்  வாழ்ந்து வந்த வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் ஆனால் ஏற்கனவே இருவரும் பிரிய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இருவரும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள் இது திரை பிரபலங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் இருவரும் பிரிய இருக்கும் இந்த முடிவை இருவரும் இணைந்து எடுத்த முடிவு தான் என தங்களுடைய கருத்தை தெரிவித்தார்கள் அதில் அவர்கள் கூறியதாவது இருவருடைய எதிர்காலத்தை கணக்கில் கொண்டு எடுத்த முடிவு என்றும் எங்களுடைய தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளித்து நண்பர்களும் இது குறித்து விவாதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

ஆனால் ஜி வி பிரகாஷ் சைத்தவி பிரிவு குறித்து சில ஊடகங்கள் மற்றும் youtube சேனல்கள் தங்களுடைய இஷ்டத்திற்கு ஏராளமான கட்டுக் கதைகளை கூறி வருகிறார்கள் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஜீவ பிரகாஷ் மற்றும் சைந்தவி தங்களுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் ஜிவி பிரகாஷ் மிகுந்த மன உளைச்சல் ஆவதாகவும் கூறியுள்ளார்.

saindhavi
saindhavi

இது குறித்து சைந்தவி கூறியதாவது youtube சேனல்கள் எங்களுடைய விவாகரத்து குறித்து கூறப்படும் கதைகளை பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது எங்களுடைய முடிவுக்கு மதிப்பளிக்க கோரிக்கை விடுத்தும் இது போன்ற கதைகளை பரப்புவது வேதனையாக இருக்கிறது ஒருவரின் குணாதிசயத்தை எந்தவித ஆதாரமும் இல்லாமல் சிதைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் இந்த முடிவு எங்கள் இருவரின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டது. நானும் ஜிவி பிரகாஷ் குமாரும் பள்ளி பருவத்தில் இருந்து நண்பர்களாக இருந்துள்ளோம். 24 வருட நட்பு இருந்துள்ளது.

அதே நட்புடன் இனியும் பயணிப்போம் என்று சைந்தவி கூறியுள்ளார் அதே போல் ஜீவி பிரகாஷ் தன்னுடைய சமூக வலைதளத்தில் ஏராளமான சேனல்கள் தங்களுடைய சொந்த கற்பனை திறனை வளர்த்துக் கொள்ள உண்மை இல்லாத விஷயத்தை தெரிவித்து வருகிறார்கள் ஒரு சிலர் எங்களது பிரிவை மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் வகையில் கற்பனை கதைகளை வெளியிட்டு வருகிறார்கள் இருப்பினும் இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு ஆதரவளித்த சிலருக்கு நன்றி என்ற ஜீவ பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/gvprakash/status/1791062726401483001?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1791062726401483001%7Ctwgr%5Edd3aca94f71117ef9a85b4bbb01c3b0365c8a692%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fgv-prakash-and-saindhavi-statement-again-tamilfont-news-354950