இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த சைத்தவியை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு திருமணம் ஆகி கிட்டதட்ட 11 வருடங்கள் ஆகிவிட்டன சுமூகமாக வாழ்க்கை சென்று கொண்டிருந்த நேரத்தில் இவர்களுக்கு அன்வி என்ற மகளும் பிறந்தார். இந்நிலையில் திடீரென இருவரும் மனம் ஒத்து விவாகரத்து செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சினிமா பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் இசையமைத்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இவர் சமீபத்தில் கள்வன் டியர் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படங்கள் பெரிதாக வெற்றியை கொடுத்து விடவில்லை.
அதனால் எப்படியாவது ஒரு நல்ல வெற்றியை ருசித்தாக வேண்டும் என முன்புறமாக இருக்கிறார் அப்படி இருக்கும் நிலையில் திடீரென இந்த விவாகரத்து சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஏற்கனவே இருவரும் விவாகரத்து செய்ய போவதாக தகவல் வெளியான நிலையில் தற்பொழுது அதனை உறுதிபடுத்தும் விதமாக 11 வருடங்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக ஜிவி பிரகாஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் ஜிவி பிரகாஷின் மனைவி சைத்தவி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் 11 வருடங்களுக்குப் பிறகு ஜிவி பிரகாஷ் நானும் திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக முடிவு எடுத்துள்ளோம் எங்கள் மன அமைதிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் இந்த முடிவை நாங்கள் இருவருமே இணைந்து எடுத்துள்ளோம் இதுதான் எங்களுக்கு சிறந்த முடிவாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் ஏற்கனவே பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் காதலில் பிரேக் அப் நடப்பதற்கு காரணம் என்ன தெரியுமா… இரண்டு பேர் வாழ்க்கையில் வேறு ஒருவர் வந்து அறிவுரை சொல்வது அவர்களிடம் ஐடியா கேட்பதுதான் இதனை முதலில் நிறுத்தினால் இந்த பிரேக்கப் ஆகாது ஏனென்றால் எல்லோரும் அவர்களுடைய வாழ்க்கையையும் அவர்கள் மேல் இருக்கும் தவறுகளையும் இவர்கள் மீது திணிக்க முயற்சி செய்வார்கள் அப்பொழுது என்ன ஆகும் இல்லாத பிரச்சனை எல்லாம் உருவாகும் அதனால் தங்களது வாழ்க்கை சம்பந்தப்பட்ட இரண்டு பேர் முடிவு செய்து வாழ்ந்தால் பிரேக் அப் நடக்காது என குறிப்பிட்டுள்ளார்..