தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகனாகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுத்து வருபவர். இவர் பிரபல பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் அன்னுன்னியமாக ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள் இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது ஏற்கனவே இவர்கள் இருவரும் பிரிய போவதாக பல தகவல்கள் வெளியானது. அப்படி இருக்கும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்பொழுது ஒரு தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஜிவி பிரகாஷ் குமார்..
அதாவது தங்களது பிரிவை உறுதி செய்யும் வகையில் இருவரும் ஒருமனதாக பிரியப் போவதாக அறிவித்துள்ளார் இது குறித்து ஜீவி பிரகாஷ் வெளியிட்டுள்ள பதிவில் எங்களது 11 வருட திருமண வாழ்க்கை மனநிம்மதிக்காக முடிவுக்கு வர முடிவெடுத்து இருப்பதாக தகவலை அறிவித்துள்ளார்.
இந்த தகவல் ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது மேலும் இப்படி இருவரும் இணை பிரியாத வாழ்ந்து விட்டு திடீரென இப்படி ஒரு றிவிப அறிவித்துள்ளர்களே என ரசிகர்கள் தங்களது வருத்தத்தை அறிவித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு வாரும் சரிகம நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார் சைந்தவி.