ஒரே பாடலில் பணியாற்றிய நான்கு பிரபலங்களும் விவாகரத்தா..? அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே..

பிறை தேடும் இரவிலே என்ற பாடலில் வேலை செய்த நான்கு பேருக்கும் விவாகரத்து ஆகியுள்ளதால் இந்தப் பாடல் காதல் பாடல் இல்லை டைவர்ஸ் பாடல் என ரசிகர்கள் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளுக்கு பஞ்சமே இருக்காது அதேபோல் ஒரு செகண்டில் காதல் வந்து விடுகிறது பிறகு சில நாட்களிலேயே திருமணத்தை முடித்துக் கொண்டு உடனே டைவோர்ஸ் நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த லிஸ்டில் தற்பொழுது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இடம் பெற்றுள்ளார்கள் இது ரசிகர்களுடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அப்படி இருக்கும் நிலையில் ஒரே ஒரு பாடலுக்கு வேலை செய்த நான்கு பேருமே விவாகரத்து பெற்றிருக்கும் நிலையில் அதனை கண்டறிந்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டு ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஜிவி பிரகாஷ் தன்னுடைய தோழியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கிட்டத்தட்ட 11 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து விட்டு திடீரென பிரிவை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இப்படி குழந்தை பிறந்த பிறகு பிரிவை அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த குழந்தைக்காவது நீங்கள் ஒன்றாக வாழ வேண்டும் என தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரே பாடலில் பணியாற்றிய நான்கு பேருமே டிவோர் செய்துள்ளதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் நடிகர் தனுஷை வைத்து அவருடைய சகோதரன் செல்வராகவன் இயக்கிய திரைப்படம் தான் மயக்கம் என்ன  இந்த திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர் மத்தியில் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிறை தேடும் இரவிலே என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

அது மட்டும் இல்லாமல் இந்த பாடலை நடிகர் தனுஷ் அவர்கள்தான் எழுதியிருப்பார் அது மட்டுமில்லாமல் அந்த பாடலுக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார் மேலும் இந்த பாடலை சைந்தவி பாடியிருப்பார் ரசிகர்களின் ஃபேவரட் பாடலாக இருக்கும் இந்த பாடல் அவர்களின் பர்சனல் பாடகலாகவும் திகழ்ந்தது. மேலும் இந்த படத்தை இயக்கிய செல்வராகவன் முதலில் சோனியா அகர்வால் அவர்களை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தார்.

அவரைத் தொடர்ந்து படத்தில் நாயகனாக நடித்த தனுஷ் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களை விவாகரத்து செய்ய இருப்பதாக நீதிமன்றத்தை அணுகினார் அது மட்டும் இல்லாமல் தற்பொழுது லிஸ்டில் ஜிவி பிரகாஷ் அவர்களும் இடம் பிடித்துள்ளார் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து இந்தப் பாடலில் பணியாற்றி உள்ளார்கள் அந்த வகையில் இருவரும் தற்பொழுது தங்களுடைய பிரிவை அறிவித்துள்ளார்கள் இப்படி இந்த பாடலில் பணியாற்றிய நான்கு பேருமே விவாகரத்து பெற்றுள்ளதால் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனே ரசிகர்கள் இது காதல் பாடல் கிடையாது டிவோர்ஸ் பாடல் என இணையதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.