ஜி.வி. பிரகாஷ் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!சூர்யாவின் வாடிவாசல் படத்தில் கலக்கபோகும் தீம் மியூசிக்!!

VADIVASAL-SURYA
VADIVASAL-SURYA

GV prakash announces actor surya’s Vadivasal movie mixes theme music : நடிகர் சூர்யா தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது என் ஜி கே, காப்பான் போன்ற படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதனைதொடர்ந்து தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் வாடிவாசல் என்ற குறுநாவலை தழுவி இயக்கப்படுகிறது. இந்த குறுநாவலை சி சு செல்லப்பா 1959 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டுள்ளார். இந்த படம் ஜல்லிக்கட்டுடன் தொடர்புடைய வாடிவாசல் என்று பெயர் வைக்க பட்டுள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்திற்கு இசை அமைப்பாளராக ஜிவி பிரகாஷ் கமிட்டாகியுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு இந்த படத்தை பற்றி பதில் அளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் இசை சார்ந்த கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் ஜல்லிக்கட்டுக்காக தீம் மியூசிக் மற்றும் காளைகளுக்காக தீம் மியூசிக் அமைக்க உள்ளோம் என்று பதிலளித்துள்ளார்.இதனை அறிந்த ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர்.