ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க போகும் குலு குலு திரைப்படம்..! இணையத்தில் வெளியானது ரிலீஸ் தேதி..!

santhanam-111

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் சந்தானம் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் முதல் முதலாக தமிழ் சினிமாவில்  அறிமுகமாவதற்கு முன்பாக சின்ன திரையில் பணியாற்றியுள்ளார் என்பதை நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக ஏகப்பட்ட ரசிகர் பெருமக்களை கவர்ந்த நடிகர் சந்தானம் அதன் பிறகு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பினை பெற்றார் இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகனாக நடித்த நமது சந்தானம் சமீபத்தில் ஹீரோவாகவும் கலக்க ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் தில்லுக்கு துட்டு, சபாபதி, போன்ற பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த நடிகர் சந்தானம் தற்பொழுது ஏஜென்ட் கண்ணாயிரம் மற்றும் குலு குலு ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு இவர் நடித்தவரும் இந்த இரண்டு திரைப்படங்களின் படபிடிப்போம் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது சந்தானம் நடித்துள்ள குலு குலு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக பட குழுவினர்கள் அறிவித்த நிலையில் இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை தன்யா ஹோப் அவர்கள் நடித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் கே. பாக்யராஜ் மனோபாலா கோவை சரளா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படத்தினை பிரசாந்த்ராஜ் அவர்கள் இயக்கி உள்ளார். மேலும் இது திரைப்படம் ஆனது தமிழ் மொழி மட்டும் இன்றி தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த திரைப்படமானது வருகின்ற ஜூலை மாதம் 29ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக பட குழுவினர்கள் அறிவித்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

kulu kulu-1
kulu kulu-1

மேலும் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகும் இந்த திரைப்படமானது முழுக்க முழுக்க நகைச்சுவை கதை அம்சம் கொண்ட திரைப்படம் என்பதன் காரணமாக ரசிகர்கள் சிந்திப்பதற்கு மிகவும் தயாராக இருங்கள் என படகுழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.