கின்னஸ் வேல்ட் ரெக்கார்ட் சாதனை படைத்த படங்கள் மற்றும் பிரபலங்கள்.!

Guinness-World-Record

தமிழ் சினிமாவில் கின்னஸ் ரெக்கார்டு என்பது ஒரு மிகப் பெரிய விஷயம்தான் ஆனால் அதையும் சாத்தியமாக்கிய படங்கள் மற்றும் பிரபலங்கள்.

சுயவரம் 1999 இல் வெளிவந்த இப்படத்தை 24 மணி நேரத்தில் எடுத்த முடித்து ஒரு மிகப்பெரிய சாதனையை படுத்தார்கள். இந்த படத்திற்கு கே எஸ் ரவிக்குமார், சுந்தர் சி, போன்ற 14 டைரக்டர்கள், 45 அசிஸ்டன்ட் டைரக்டர், இந்த படத்திற்கு மொத்தம் 1483 பேர் வேலை செய்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் 14 முன்னணி நடிகர்கள் மற்றும் 12 முன்னணி நடிகைகளை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. 1999இல் ஏப்ரல் 5ஆம் தேதி காலையில் 7 மணிக்கு இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளனர். மறுநாள் காலையில் 6.58 க்கு மொத்த வேலையையும் முடித்து விட்டார்கள். 23 மணிநேரம் 58 நிமிஷத்துக்கு முடித்ததால்  இந்தப் படத்திற்கு கின்னஸ் ரெக்கார்டு கொடுக்கப்பட்டது.

அகடம் 2014 இல் வெளிவந்த இத்திரைப்படத்தை முகமத் ஐசக் என்பவர் டைரக்சன் செய்துள்ளார். இந்தப் படத்தை ஒரே ஷாட்டில் எந்த ஒரு இடத்திலும் கட் பண்ணாமல் 2 மணி நேரம் 3 நிமிடம் 30 செகண்டில் எடுக்கப்பட்டது. அதாவது ஒரு முழு படத்தையும் எந்த ஒரு இடத்திலும் கட் பண்ணாமல்  ஒரே ஷாட்டில் சூட் செய்ததார்காக இந்த படத்திற்கு கின்னஸ் ரெக்கார்டு கொடுக்கப்பட்டது. இதே கேட்டகிரியில் ரஷ்யன் ஆர்க் என்ற ஒரு திரைப்படம் கின்னஸ் ரெக்கார்டு பெற்றது இதை முறியடித்து அகடம் படம் கின்னஸ் ரெக்கார்டு பெற்றது.

சிவப்பு மலை இந்தப் படத்தை கிருஷ்ணமூர்த்தி டைரக்டர் என்பவர் எடுத்துள்ளார். இத்திரைப்படம் ரொம்ப குறைவான நாட்களில் எடுக்கப்பட்டு  தியேட்டரில் வெளியானது என்பதால் இந்த படத்திற்கும் கின்னஸ் ரெக்கார்ட் வழங்கப்பட்டது. அதாவது படம் எழுத ஆரம்பித்ததிலிருந்து  தியேட்டர்களில் வெளியாகும் வரை இப்படத்தின் கவுண்டன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. இந்தப்படத்தைப் 11 நாட்கள் 23 மணி நேரம் 45 நிமிஷம்  இந்த படத்தை மொத்தமாக முடிப்பதற்காக எடுக்கப்பட்டது. இதனால் இந்த படத்திற்கு கின்னஸ் ரெக்கார்டு கொடுக்கப்பட்டது.

நாதஸ்வரம் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியல் திருமுருகன் டைரக்ஷன் செய்துள்ளார். இந்த சீரியலின் 1000 மாவது எபிசோடை லைவ் ஆக ஒளிபரப்ப வேண்டும் என்று திருமுருகன் இந்த முயற்சியில் ஈடுபட்டார். இந்த சீரியலை 23 நிமிஷம் 25 செகண்டில் சிங்கிள் ஷாட்டில் எடுத்து லைவாக சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். இதற்காக நாதஸ்வரம் டீம் கின்னஸ் ரெக்கார்டு  வாங்கினார்கள்.

பாகுபலி படத்தின் போஸ்டர் பாகுபலி படத்தின் புரமோஷனுக்காக 50 ஆயிரம் அடியில் மிகப்பெரிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டார்கள் இந்தப் போஸ்டர்தான் உலகின் மிகப்பெரிய போஸ்டர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்த போஸ்டரை குளோபல் யுனைடெட் மீடியா என்ற கொச்சியை சேர்ந்த நிறுவனம் வெளியிட்டது.

ஆச்சி மனோரமா 1985 இல் 1000 படங்களுக்கு மேலாக நடித்துவிட்டார் என்பதால் இவருடைய பெயர் கின்னஸ் புத்தகத்தில் பதிவானது. அதுமட்டுமல்லாமல் 2015 இல் இவர் இறக்கும் வரை 1500 படங்கள் வரை மனோரமா நடித்துள்ளார்கள் என்று கூறப்பட்டது.

manorama
manorama

பக்ரு ஜீவா நடித்த டிஷ்யூம் படத்தில் நடித்துள்ளார், மற்றும் காவலன் திரைப்படத்திலும் நடித்துள்ளார், இந்த பக்ரு  இரண்டு கேட்டகிரியில் கின்னஸ் ரெக்கார்ட் படைத்துள்ளார். முதலில் அற்புத தீவு என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருப்பார் அதில் ரொம்ப குட்டியானை மனிதர்களில் லீட்ரோல் பண்ணியவர் என்ற கேட்டகிரியில் இவர் கின்னஸ் ரெக்கார்ட் படைத்தார். இவருடைய ஹைட் வந்து 2 அடி 6 இன்ச், அதாவது 76 சென்டிமீட்டர். இன்னொரு கேட்டகிரி என்னவென்றால் குச்சியும் கோலும் என்ற மலையாள படத்தை 2013இல் டைரக்சன் செய்துள்ளார் என்பதற்காக டைரக்டர் கேட்டகிரியிலும் இவருக்கு கின்னஸ் ரெக்கார்டு கிடைத்தது.

bakru

பாடகி பி சுசீலா இதுவரைக்கும் பி சுசிலா அவர்கள் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி,போன்ற ஏகப்பட்ட இந்திய மொழிகளில் இவர் பாடல்களை பாடியிருக்கிறார். ஒற்றை மனிதராக மட்டும் 17,695 பாடல்களை இவர் பாடியுள்ளார். அதிகப்படியான பாட்டுகளை பாடியதற்காக இவருக்கு கின்னஸ் ரெக்கார்டு கொடுக்கப்பட்டது.

தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம், இதுவரைக்கும் ஆயிரம் படத்திற்கு மேலாக இவர் நடித்துள்ளார். இவருடைய பெயரும் கின்னஸ் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. தற்போது வாழும் நடிகர்களில் அதிகம் படங்கள் நடித்த நடிகர் என்ற கேட்டகிரியில் இவருக்கு கின்னஸ் ரெக்கார்டு கிடைத்துள்ளது.

மறைந்த மலையாள நடிகர் பிரேம் நசீர், 120 படங்களில் இவர்  லீட்ரோல் செய்துள்ளார். இதற்காக இவருக்கு கின்னஸ் ரெக்கார்டு கொடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மற்றொரு ரெக்கார்டும் செய்துள்ளார். சீலா என்ற நடிகையுடன்  130 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். என்ற இரண்டு சாதனைக்காக  இவருடைய பெயர் கின்னஸில் இடம் பிடித்துள்ளது.

அடுத்ததாக மலையாள நடிகர் ஜான்சன் சார்ஜ் ஆரானுங் நான் என்ற திரைப்படத்தில் 45 கேரக்டர்கள் நடித்துள்ளார். இப்படத்தில் இவர் மகாத்மா காந்தி, நேரு, அப்துல் கலாம், போன்ற கேரக்டர்களில் நடித்துள்ளார். இதற்காக கின்னஸ் புத்தகத்தில் இவருடைய பெயர் இடம் பிடித்துள்ளது..

தெலுங்கு சினிமாவில் விஜய் நிர்மலா என்ற டைரக்டர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 44 திரைப்படங்களை தெலுங்கில் டைரக்ஷன் செய்துள்ளார். அதனால் அதிக படத்தை டைரக்ஷன் செய்துள்ள பெண் இயக்குனர் கேட்டகிரியில் கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் இடம் பிடித்துள்ளது.

அடுத்ததாக தயாரிப்பாளர் டி ராமாநாயுடு இவரும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தான் இதுவரைக்கும் 13 மொழிகளில் 150 படம் வரைக்கும் இவர் தயாரித்துள்ளார். அதிக படங்களை தயாரித்த தயாரிப்பாளர் என்ற கேட்டகிரியில் கின்னஸ் ரெக்கார்டு இவர் செய்துள்ளார்.

கடைசியாக எஸ் பி பாலசுப்ரமணியம் அதிக பாடல்களைப் பாடிய கேட்டகிரியில் கின்னசில் இடம்பிடித்ததாக இவர் இறந்த பின் நியூஸ் சேனலில் வந்தது.

sp balasubramaniam