ராபர்ட் காதலுக்கு கிரீன் சிக்னல்.! ஆனால் உண்மையான வண்டவாளத்தை போட்டுடைத்த அவரின் அப்பா..

ROBERT-MASTER
ROBERT-MASTER

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலை எண் அனைத்து சீசர்களிலும் டான்ஸ் மாஸ்டர் கண்டிப்பாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது ஆறாவது சீசனில் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் பங்கு பெற்ற வருகிறார்  இவர் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை கூறிய விஷயங்களில் மாட்டி வரும் நிலையில் தொடர்ந்து இவரை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அதாவது ராபர்ட் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கொஞ்ச நாளிலேயே ரச்சிதாவின் மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார் மேலும் தன்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி பேசும்பொழுது தனக்கு சின்ன வயதிலேயே போலியோ அட்டாக் வந்துவிட்டதாகவும் தன்னுடைய தந்தையின் முயற்சியினால் மட்டும்தான் சரியானதாகவும் நடனம் கற்றுக் கொண்டதாகவும் கூறினார். இதனை தொடர்ந்து தன்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் பிரிவை பற்றியும் பேசி உள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ராபர்ட் மாஸ்டரின் தந்தை பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க தன்னுடைய மகனைப் பற்றி கூறியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, ராபர்ட்டுக்கு போலியோ அட்டாக் வந்தது உண்மைதான் என்றும் மேலும் அவர் 18 வயதிலேயே காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதாகவும் இன்று வரை தன்னுடைய பேத்தியை பார்த்ததே இல்லை என்றும் கூறினார்.

மேலும் ராபர்ட் ரட்சிதாவை காதலிக்க வாய்ப்பே இல்லை அந்த நிகழ்ச்சிக்காக அவர் அப்படி விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார். அப்படியே அவர் காதலித்தாலும் எந்த தப்பும் இல்லை இது இயல்பான ஒன்று இதில் முகம் சுளிக்கும் அளவுக்கு தன்னுடைய மகன் எதுவும் தப்பாக செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.

பிறகு வனிதா ராபர்ட் மாஸ்டர் பிக் பஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு உதவி செய்ததாக அவர் பல யூடியூப் சேனல்களில் கூறிவரும் நிலையில் அதற்கு பதிலளித்த ராபர்ட் தந்தை மனித உதவியதாக ராபர்ட் என்னியிடம் எதுவும் கூறவில்லை என்றும் பிக்பாஸ் வீட்டில் கூட அவர் இதைப் பற்றி குறிப்பிடவில்லை என்றும் ராபர்ட் வெளியில் வந்தால் தான் இதை பற்றி கேட்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

ராபர்ட் பிக்பாஸ் வீட்டில் இயல்பாகவே இல்லை மிகவும் துறுதுறுவென்று இருக்கக் கூடியவர் அங்கே ரொம்ப அமைதியாக இருப்பதாகவும் அவர் இயல்பு நிலையில் இருந்து இன்னும் நன்றாக விளையாடி பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்க வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்றும் ராபர்ட் மாஸ்டரின் தந்தை தெரிவித்துள்ளார்.