பச்சை கலர் தாவணி பாவாடையில் தர லோக்கலாக நடனமாடும் ஷிவானி நாராயணன்.! ட்ரெண்டிங்கில் அடித்து தூக்கும் வீடியோ

சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் நடிக்கும் நடிகைகள் பெருமளவு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அதுமட்டுமில்லாமல் அந்த சீரியலில் நடிக்கும் கதாநாயகிகளை ரசிகர்களுக்கும் வெகுவாக பிடித்துப்போனது.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் படத்தின் டைட்டிலை சீரியல் டைட்டிலாக வைத்து சீரியல்களை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள். அந்தவகையில் கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர் என பல சீரியல்கள் படத்தின் டைட்டிலை வைத்துதான் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஷிவானி நாராயணன் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன்பிறகு சரவணன் மீனாட்சி மூன்றாவது பாகத்திலும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி, இரட்டை ரோஜா என பல சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மேலும் பிரபலம் அடைந்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு நான்கு மணி ஆகிவிட்டாலே கலர்கலராக கிளாமர் புகைப்படத்தை அள்ளி வீசி வந்தார்.

அதன் மூலம்தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது என்று கூட கூறலாம். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். ஷிவானி நாராயணன் சமீபகாலமாக சமூகவலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை நிறுத்தி வைத்திருந்தார் ஆனால் இதெல்லாம் சரிப்பட்டு வராது என மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்பது போல் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

இந்த நிலையில் ஷிவானி நாராயணன் லாக் டவுனில் மிகவும் போர் அடித்து விட்டதால் ஒரு ரிகர்சல் பண்ணலாம் எனக்கூறி தர லோக்கலாக இறங்கி நடனமாடியுள்ளார் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் தற்போது இந்த வீடியோ அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.