ஹன்சிகாவை கட்டி அணைத்தபடி நடிகர் சிம்பு..! புதிய போஸ்டருடன் வெளிவந்த மகா பட அப்டேட்..!

maha-2

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து தற்போது ஒரு திரைப்படத்தில் ஆவது ஹிட்டு கொடுக்க மாட்டோமா என எண்ணி ஏங்கிக் கொண்டிருந்த நடிகர்தான் நடிகர் சிம்பு. இந்நிலையில் அவர் நினைத்தது போலவே தற்போது மாநாடு திரைப்படம் அவருக்கு ஒரு வரப்பிரசாதம் போல அமைந்தது.

இவ்வாறு இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் தான் இயக்கி இருந்தார் மேலும் இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர் தயாரித்தார் அந்த வகையில் இந்த திரைப்படமானது பல்வேறு போராட்டங்களை கடந்து தான் திரையரங்கில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இந்த திரைப்படம் திரையரங்கில் வெற்றி நடை போட்டு வரும் நிலையில் சிம்புவின் அடுத்த திரைப்படமான மகா திரைப்படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்டில் இணையத்தில் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக சிம்புவின் முன்னாள் காதலி ஹன்சிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல வருடங்களாக வெற்றிக்கு காத்திருந்த நடிகர் சிம்புவுக்கு மாநாடு திரைப்படமானது ஒரு நல்ல திரைப்படமாக அமைந்தது இது மூலமாக பட குழுவினர்கள் மிகுந்த சந்தோசத்தில் இருப்பது மட்டுமில்லாமல் சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகிறார்கள்.

அதேபோல சிம்புக்கு இந்த  திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்ததோ அதே போலதான் sjசூர்யாவுக்கும் இந்த திரைப்படம் ஒரு நல்ல திரைப்படமாக அமைந்தது. மேலும் சமீபத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவான மகா திரைப்படம் ஆனது படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு நடிகை ஹன்சிகா சிம்புவை வற்புறுத்திய காரணமாக தான் அவர் நடிக்க ஒப்புக்கொண்டாராம் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது ஏனெனில் இந்த புகைப்படத்தில் சிம்பு-ஹன்சிகா மாடியில் குட்டித் தூக்கம் போடுவது போல அமைந்திருக்கும்.

maha-1
maha-1

ஆனால் இத்திரைப்படம் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாகும் மேலும் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்து இருப்பார். அந்த வகையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலை வருகின்ற 4ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள்.  அத்துடன் சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து இருக்கும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்கள்.