கோவிலுக்கு சென்ற நயன்தாராவின் கையை தொட்ட மூதாட்டி.! அதற்கு நயன்தாரா என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.. வைரலாகும் வீடியோ

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் வினேஷ் ஷிவன் அவர்களுடன் காதலில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தற்பொழுது நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆனால் இதற்கு முன்பு சிம்பு பிரபுதேவா ஆகியோர்களை காதலித்தார் நயன்தாரா.

நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனை உடன் அழைத்துச் செல்கிறார், என்னதான் படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் நயன்தாரா தன்னுடைய காதலருடன் ஊர் சுற்றுவதை தவறாமல் செய்து வருகிறார்.

அடிக்கடி இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை அப்செட் செய்துவிடுகிறார்கள், ஆனால் இருவரும் இதுவரை திருமணம் பற்றி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை நயன்தாரா சினிமா வாழ்க்கையில் அடையப்போகும் உச்சத்தை பற்றியும் நயன்தாராவின் வாழ்க்கை பற்றியும் ஒரு ஜோதிடர் கணித்துக் கூறினார் அது அப்படியே நடந்து விட்டதால் அந்த ஜோதிடரை நம்பி வருகிறாராம்.

அவர் சொன்னதால்தான் கடந்த ஆண்டிலிருந்து நயன்தாரா விக்கி ஜோடி அடிக்கடி கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அந்த ஜோதிடர் நயன்தாரா வாழ்க்கையில் திருமண தோஷம் இருப்பதாக கூறியுள்ளார் அதனால் காளஹஸ்தி சென்று வழிபடவேண்டும் என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சென்று வழிபட சொல்லி இருக்கிறார் அந்த ஜோதிடர் அதனால் நயன்தாரா மற்றும் விக்கி லாக் டவுன் முடிந்தவுடன் அந்த கோவிலுக்கு சென்று ராகு பகவானை தரிசித்து விட்டு வந்துள்ளார்கள். அதனால் கூடிய விரைவில் நயன்தாரா திருமணம் நடைபெறும் என கூறுகிறார்கள்.

nayanthara viki
nayanthara viki

நயன்தாரா மற்றும் விக்கி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றபோது நயன்தாராவை பார்த்த மூதாட்டி ஒருவர் நயன்தாராவின் கையை பிடித்தார் அப்பொழுது கொஞ்சம் ஷாக் அடைந்த நயன்தாரா பின்னர் அந்த மூதாட்டியை பார்த்து புன்னகை சிரிப்புடன் கையெடுத்து கும்பிட்டு நயன்தாரா சென்றுள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.