விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாகியுள்ளது. மேலும் இந்த சீரியலில் கோபி பாக்கியாவை முதலில் திருமணம் செய்து கொள்வார் ஆனால் திடீரென அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இனியா அப்பாவின் செல்லம் என்பதால் கோபியுடன் இருந்து வருகிறார். இனியாவுக்கு துணையாக ராமமூர்த்தியும் கோபி வீட்டில் தான் இருக்கிறார்.
ராமமூர்த்தி ஈஸ்வரி இடம் இனியாவுக்கும் ராதிகாவுக்கும் ஒத்தே போகவில்லை அதனால் மிகவும் கோபப்படுகிறார். ராதிகா என்ன கூறினாலும் இனியா எதிர்த்து தான் பேசிக் கொண்டிருக்கிறார் அவருடைய எதிர்காலம் என்ன ஆகும் என்பது பயமாக இருக்கிறது என ஈஸ்வரிடம் கூறிக் கொண்டிருக்க இனியாவை கண்டிக்க இவள் யார் கோபி கண்டிக்கட்டும் இவங்க ஏன் கண்டிக்கணும் என ஈஸ்வரி கூற அதற்கு ராமமூர்த்தி அவள் அங்கு இருப்பதால் ஏதாவது ஒன்று என்றால் நம் தலையில் விடிந்து விடும் என பயத்தில்தான் அவர் கூறுகிறார் என ஈஸ்வரி இடம் எடுத்துக் கூறுகிறார் ராமமூர்த்தி.
இந்த நிலையில் பாக்கியா ராதிகா ஆபீஸில் கேண்டீன் ஒன்றை எடுத்து நடத்தி வருகிறார் அந்த கேண்டின் ராதிகாவின் கண்ட்ரோலில் இருக்கிறது அதனால் பாக்கியாவை சுடிதார் அணிந்து கொண்டு தான் இனி வேலை செய்யணும் என கண்டிஷன் போடுகிறார் இதனால் பாக்கிய ஓடிவிடுவார் என நினைத்துக் கொண்டிருந்தார் ராதிகா ஆனால் பாக்கியா சுடிதார் போட்டுக்கொண்டு கேண்டினுக்கு வருகிறார். அங்கு செல்வியும் சுடிதாரில் வந்தார் அங்கு வந்த ராதிகாவிடம் செல்வி பாக்யா அக்கா இதுவரை சுடிதார் போட்டது கிடையாது அதனால் வெட்கப்படுகிறார் என ஓவர் டோஸ் ஆக ராதிகாவின் தலையில் ஐஸ் வைப்பது போல் கூறிக் கொண்டிருக்கிறார்.
இதைக் கேட்ட ராதிகா அப்பொழுது பாக்கியலட்சுமி சுடிதார் போடவில்லை என நினைத்துக் கொண்டு சிரிக்கிறார் ஆனால் திடீரென பாக்யா சுடிதாரில் வருவதை பார்த்து ராதிகாவின் முகம் சுருங்குகிறது. அடுத்த காட்சியில் பாக்கியா ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் கிளாசுக்கு செல்கிறார் சுடிதாருடன் செல்வதால் அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள் மேலும் அங்கு இருக்கும் பாக்கியாவின் நண்பர் ரஞ்சித் இவரைப் பார்த்து ஆச்சரியம் அடைகிறார் இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாக்கிய திடீர்னு எழுந்து நிலா பாப்பாவிற்கு பர்த்டே அதனால அனைவரும் வரவேண்டும் என இன்வைட் பண்ணுகிறார்.
நிலா பாப்பாவுக்கு பர்த்டே க்கு அனைத்து ஏற்பாடுகளையும் பாக்யா செய்து கொண்டிருக்கிறார் அப்பொழுது அங்கு வந்த ஈஸ்வரி என்ன திடீரென அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என கேட்க அதற்கு ஜெனி நிலா பாப்பாவுக்கு பர்த்டே அதனால்தான் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம் என கூறிக் கொண்டிருக்கிறார். என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லவே இல்லை என கூற அதற்கு பாக்கியா உங்களிடம் சொன்னால் நீங்களும் வந்து வேலை செய்வேன் என நிற்பீர்களா அதனால் காலை வலிக்கும் அதனால்தான் கூறவில்லை என பாக்யா சமாளித்து விடுகிறார்.
பின்பு அங்கு வந்த ராமமூர்த்தி இனியாவும் எல்லா ஏற்பாடு முடிந்து விட்டதா என கேட்க அதற்கு ஈஸ்வரி எங்கிட்ட மட்டும் தான் சொல்லலையா எல்லாருமே சொல்லிட்டீங்களா என கேட்கிறாள் பின்பு நிலா பாப்பா எங்கே என கேட்க அவர்கள் எழில் அமிர்தா இருவரும் கோவிலுக்கு கூட்டிக்கொண்டுசென்றுள்ளார்கள் எனக் கூறுகிறார். அந்த சமயத்தில் அமிர்தாவின் அம்மா அப்பா இருவரும் வருகிறார்கள். அனைவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது நிலா பாப்பா எழில் அமிர்தா அலங்காரத்தை பார்த்த அதிர்ச்சடைகிறார்கள்.
மேலும் அந்த நேரத்தில் பாக்கியா அவருக்கு ஒரு போன் கால் வருகிறது அப்பொழுது பாக்யாவின் நண்பர்கள் வெளியே வந்து நிற்கிறார்கள் எழிலை பாக்கியா அழைத்துக் கொண்டு வர கூறுகிறார். எழிலும் அவர்களையும் அழைத்துக் கொண்டு வருகிறார் பின்பு நிலா பாப்பா புது டிரஸ் போட்டு கொண்டு வந்து நிற்க அங்கிருந்து செழியன் மேலே இருந்து இறங்கி வருகிறார் அப்பொழுது நிலா பாப்பா பெரியப்பா எனக் கூற செழியன் இறங்கி வந்து நிலா பாப்பாவை தூக்கி கொஞ்சுகிறார்.
பின்பு அனைவரும் இணைந்து கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.