சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியரின் பேத்தி ஒரு நடிகையென்பது குறித்து தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது முத்துசாமி அய்யர் பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உச்சிவாடி என்னும் கிராமத்தில் பிறந்தார் குழந்தை பருவத்தில் தந்தையை இழந்த முத்துசாமி தனது தாயுடன் திருவாரூர் சென்று கிராம கணக்கர் பணி செய்தார்.
இருப்பினும் அதிகாலையிலும் இரவிலும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தார் முத்துசாமி அய்யரின் படிப்பாற்றலை பாராட்டி முத்துசாமி ஐயரை சென்னை பாண்டிச்சேரி பள்ளியில் தன் சொந்த செலவில் படிக்க வைத்தார் அதன் பிறகு 1854 ஆம் ஆண்டு முத்துசாமி அய்யர் சென்னை ராஜதானிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆங்கில கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு பரிசை வென்றார்.
இவ்வாறு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார் இப்படி தொடர்ந்து சட்டம் பயின்று வந்த இவர் பிறகு 1871-1877 முடிய மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய முத்துசாமிக்கு 1877 சென்னை உச்சநீதிமன்ற நீதிபதியாக 1895ஆம் ஆண்டு வரை பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் பிறகு 1893 மூன்று மாதங்கள் சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றார்.
இதனால் ஏராளமான புதிய சட்டங்களையும் அறிமுகப்படுத்தினார் அதன் பிறகு 1895ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி முத்துசாமி காலமானார் எனவே இவருடைய நினைவை பாராட்டும் விதமாகத்தான் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அவரது முழு உயர சிலையை வைத்துள்ளனர். இப்படிப்பட்ட இவருடைய பேத்தி நடிகை என்பது பலருக்கும் தெரியாது.
ஆம், அது வேறு யாருமில்லை இயக்குனர் மற்றும் நடிகருமான சேரனின் ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை விமலா ராமன் தான் அவரது பேத்தி இவர் தமிழில் சில திரைப்படங்களில் நடித்து பிறகு காணாமல் போனார். மேலும் மலையாளத்திலும் நடித்து வந்த இவர் கடந்த 2004ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த பொய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதன் பிறகு தான் ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தமிழில் இவருக்கு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், திலீப் போன்ற ஏராளமான ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அழகி போட்டியில் கலந்துகொண்டு பரிசையும் பெற்றார் என்பதை குறிப்பிடத்தக்கது. இவர் இவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது இவர் நடிகர் வினய்யுடன் காதலில் இருந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.