மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட குக் வித் கோமாளி பிரபலம்.! குழந்தை பிறந்திருப்பதாக ட்ரோல் செய்து கலாய்க்கும் ரசிகர்கள்..

cook-with-comali
cook-with-comali

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி 3 சீசன்கள் நிறைவு பெற்ற நிலையில் 4வது சீன் சமீபத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீசனின் மூலம் கோமாளியாக அறிமுகமான ஜி பி முத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அது குறித்த போட்டோ சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சோசியல் மீடியாவில் செத்த பயலே.. நார பயலே.. என நெல்லை வட்டார வழக்கில் பேசி டிக் டாக் செய்த பிரபலமானவர்தான் ஜி.பி முத்து.

இவ்வாறு சோசியல் மீடியாவின் மூலம் பிரபலமான இவருக்கு விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 4வது போட்டியாளராக பங்குப் பெற்று வருகிறார். இவ்வாறு இந்நிகழ்ச்சியில் இவர் பிஸியாக இருந்து வந்த நிலையில் தன்னுடைய உடலை சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார்.

எனவே ஜி.பி முத்து படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் நிலையில் வேறு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. எனவே எதற்காக ஜி.பி முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற உண்மையான காரணம் தெரியவில்லை.

gp muthu
gp muthu

ஆனால் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ட்ரோல் செய்து வருகிறார்கள். அதாவது ஜிபி முத்துக்கு குழந்தை பிறந்துள்ளதாக கமெண்ட் போட்டு கலாய்த்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் பங்கு பெறுவாரா? என்பதனை பொறுத்திருந்துதான் தெரிந்துக் கொள்ள முடியும்.