பிக் பாஸ் 6வது சீசனில் நீச்சல் குளத்தில் படுத்துக்கொண்டு ஊரத் தெரிஞ்சுகிட்டன் உலகம் புரிஞ்சுகிட்டன் கண்மணி என்ற பாடலை பாடி ஜி பி முத்து புலம்புகிறார் இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜி பி முத்து இவர் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என பலரும் கூறிய நிலையில் திடீர் என ஜி பி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் போகவில்லை என கூறினார். இந்த நிலையில் தற்பொழுது பிக் பாஸ் ஆறாவது சீசனில் ஜி பி முத்து கலந்து கொண்டுள்ளது ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்துள்ளது ஏனென்றால் மற்ற போட்டியாளர்களை விட ஜிபி முத்துவிற்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஓவியாவிற்கு எப்படி ஆர்மியை தொடங்கினார்களோ அதே போல் தற்பொழுது ஜிபி முத்து அவர்களுக்கு பிக் பாஸ் ஆர்மி தொடங்கி விட்டார்கள் ஜி பி முத்து பிக்பாஸ் ஆறாவது சீசனில் தங்களுடைய ஹேர் ஸ்டைலை பக்கவாக மாற்றி ஜி பி முத்து 2.0 என்று கூறும் அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு பக்கா ஜென்டில்மேன் ஆக கலந்து கொண்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் ஆர்மியை தொடங்கி விட்டார்கள் இவர் என்ன செய்கிறார் எப்படி நடந்து கொள்கிறார் என ஒவ்வொரு நிலையையும் வாட்ச் செய்து சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஜி பி முத்து விற்கும் தனலட்சுமிக்கும் இடையே சண்டை வெடித்து விட்டது நான் உன்னை என்னோட மகளாக தான் நினைத்து பேசினேன் ஆனால் நீ எப்படி நடிக்கிறான் என்று மரியாதை இல்லாமல் பேசக்கூடாது என பேச தனலட்சுமியும் அவ இவன்னு பேசாதீங்க என எகிரி குதிக்கிறார் அதன் பிறகு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் மத்தியில் கண்கலங்கியபடி ஜி பி முத்து அழுகிறார் இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மக்களை சிரிக்க வைக்கும் ஜி பி முத்து அழுவதா என ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளார்கள். நீச்சல் குளத்தில் படுத்துக் கொண்டிருக்கும் ஜி பி முத்து திடீரென எழுந்து ஊரத் தெரிஞ்சுகிட்டன் உலகம் புரிஞ்சுகிட்டன் கண்மணி என் கண்மணி என கைகளை அசத்த படி பாட்டு பாடுகிறார் இதனை அமுதவாணனும் சாந்தியும் ரசித்துப் பார்த்தார்கள் அதுமட்டுமில்லாமல் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.