தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித் இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அது மட்டுமல்லாமல் அதே தினத்தில் விஜயின் வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளதால் இந்த இரண்டு படங்களில் எந்த படம் வெற்றியடையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இந்த நிலையில் வாரிசு திரைப்படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அஜித் நடித்து வரும் துனிவு படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் டிக் டாக் புகழ் ஜி பி முத்து அவர்கள் அஜித்துடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் அவர்கள் ஏ கே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்க உள்ளார்.
ஏ கே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு பொங்கல் முடிந்தவுடன் தொடங்கும் எனக் கூறப்படுகிறது இந்த நிலையில் ஜிபி முத்து இணைவது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க விவசாயத்தைப் பற்றி எடுத்துரைக்கும் திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஏ கே 62 படத்தின் படபிடிப்பு நெல்லை போன்ற பகுதிகளில் உருவாக உள்ளது இதனால் ஜி பி முத்துவின் கலக்கலான பேச்சு ஏ கே 62 படத்திற்கு ஒரு பொருத்தமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஏகே 62 படத்தில் ஜிபி முத்து அவர்கள் முழு நேர காமெடியனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜிபி முத்து அவர்கள் தற்போது சன்னிலியோனுடன் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது