மலையாளத் திரைப்படங்களில் நடித்து ஓரளவிற்கு பிரபலமடைந்து இதன்மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள நடிகை தான் கௌரி கிஷன். இவர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 96 திரைப்படத்தின் மூலம் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற கர்ணன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.இத்திரைப்படங்களை தொடர்ந்து இன்னும் தமிழ் திரைப்படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இவரின் ரசிகர்கள் கௌரி கிஷன் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் எப்போது தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.
இவ்வாறு தற்போது உள்ள இளைஞர்களின் ஃகிரஸ்ஷாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் இவர் வெளியிடும் ஒரு சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது குட்டையான உடையில் தொடை தெரியும் அளவிற்கு ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.