சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொழுது நடிகர் கௌதம் கார்த்திக் செல்போனை மர்ம நபர்கள் பரித்து சென்றார்கள்.
நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் இவர் 2013ம் ஆண்டே கடல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். நடிகர் கார்த்திக் கௌதம் கார்த்திக் போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார்கள்.
ஹர ஹர மகாதேவி இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார் இவர் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி எடுத்து வருபவர்.
அதேபோல் புதன்கிழமை அதிகாலை வழக்கம்போல் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார், பயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்புகையில் ராதாகிருஷ்ணன் டிடிகே சாலையில் மர்ம நபர்கள் வழிமறித்து உள்ளார்கள்.
வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் இடமிருந்து கௌதம் கார்த்திக் தப்பிக்க முயற்சி செய்த போது கௌதம் கார்த்திக்கை கீழே தள்ளி விட்டுள்ளார்கள் அதன் பிறகு கௌதம் கார்த்திக் கையில் இருந்து விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பித்துள்ளார்.
பின்பு கௌதம் கார்த்திக் மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளாராம் தான் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் போலீஸார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளார்கள்.
செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.