தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர்தான் நடிகர் மீசை ராஜேந்திரன் இவர் வைகைப்புயல் வடிவேல் உடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் அப்போது நடிகர் கவுண்டமணிக்கு இருந்த கெத்து வடிவேலுக்கு சுத்தமா இல்லை என்று கூறியுள்ளார்.
அதாவது நடிகர் வடிவேலு பழைய வடிவேலாக இருக்கிறார் என்றால் சுத்தமா இல்லை அதுமட்டுமல்லாமல் தெனாலிராமன் படத்தில் ரீ என்றி கொடுக்கிறார் என்று சொல்லியுள்ளார்கள், எலி படத்தில் ரீ என்றி கொடுக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள், அதேபோல தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலும் ரி என்ட்ரி கொடுக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் நடிகர் வடிவேலுக்கு சுத்தமாக செட் ஆகவில்லை அது மட்டும் அல்லாமல் காமெடி வேண்டுமானால் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது அது மட்டுமல்லாமல் முன்னாடி நடிகர் வடிவேலுக்கு ஏற்றவாறு காமெடி கதை எழுதும் இயக்குனர்கள் தற்போது யாரும் இல்லை என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் நடிகர் கவுண்டமணி ரீ என்ட்ரி கொடுத்தது போல் நடிகர் வடிவேலு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார் அதாவது நடிகர் கவுண்டமணி கரகாட்டக்காரன் படத்தில் ரீ என்றி கொடுத்துள்ளார் அதிலும் குறிப்பாக அவருடைய அந்த வாழைப்பழம் காமெடி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அதேபோல நடிகர் வடிவேலு ரீ என்ட்ரி கொடுக்கிற பெயரில் ரசிகர்களை ஏமாற்றி உள்ளார் அது மட்டுமில்லாமல் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் அவருக்கு சுத்தமாவே செட்டாகவில்லை பழைய வடிவேலு மாதிரி ரீ என்றி கொடுப்பார் என்று எண்ணியிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியது. என்னதான் இருந்தாலும் கவுண்டமணி கொடுத்த ரீ என்றி வடிவேலு வால் கொடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் மீசை ராஜேந்திரன். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.