Rajini : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார் கைவசம் லால் சலாம், வேட்டையன் போன்ற படங்கள் இருகின்றன. சினிமாவின் மூலம் பல கோடி சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் இப்பொழுதும் ரஜினி எளிமையாக இருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட ரஜினி ஆரம்ப காலகட்டத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார் அது பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்.. 16 வயதிலேயே படத்தில் ரஜினி, கமல் ஸ்ரீதேவி பலரும் நடித்திருந்தனர் இந்த படத்தில் கவுண்டமணியும் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிக்கும் பொழுது ரஜினிக்கும், கவுண்டமணிக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.
அதன் பிறகு இருவரும் சகஜமாக பழகி வந்தனர். அந்த காலத்தில் நடிகர், நடிகைகள் அனைவரையும் காரில் அழைத்துச் சென்று அவரவர்களின் வீட்டில் விடுவது வழக்கம் முதலில் டாப் நடிகர்களை இறக்கிவிட்டு கடைசியாக சின்ன நடிகர்களை விடுவார்களாம்..
ஒரு தடவை காரில் 5 பேர் இருந்ததால் இடம் கிடைக்காமல் ரஜினியும், கவுண்டமணியும் நடந்தே வந்திருக்கிறார்கள் அப்பொழுது கவுண்டமணி ரொம்பவும் வருத்தப்பட அதற்கு ரஜினி கவலை படாதீங்க அண்ணா எதிர்காலத்தில் 7 கார் வாங்கிய தினமும் ஒரு காரில் வருவீர்கள் எனக்கூறி இருக்கிறார் அதுபோல தொடர்ந்து படங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தார்.
லியோவில் நீக்கப்பட்ட காட்சி.. அட, இந்த சீன் இருந்திருந்தா செம மாஸா இருந்திருக்கும்..
ரஜினியின் மன்னன் படத்தில் கவுண்டமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தாராம் அப்பொழுது ரஜினியை வழக்கம்போல வாயா.. போயா.. என்று பேசி உள்ளார் கவுண்டமணி அதற்கு இயக்குனர் வாசு அப்படியெல்லாம் மரியாதை இல்லாமல் பேசக்கூடாது அவர் இன்று மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் அவருக்கு என்ன ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது என வாசு கவுண்டமனிடம் பேசிக்கொண்டிருப்பதை..
கவனித்துக் கொண்டிருந்த ரஜினி அருகில் வந்து கவுண்டமணி அண்ணன் எப்பொழுதும் போன்று பேசட்டும் படத்திலும் அண்ணன் அப்படி பேசுவது தான் சரியாக இருக்கும் என்று ரஜினி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ரஜினியின் பெருந்தன்மையை பார்த்து படக்குழுவினர் அனைவரும் வியந்து போனவர்களாம்.