அவன் ஒரு ஆளுன்னு அவனுக்கு வாய்ப்பு கொடுக்கிறியா நீ.! சந்தானத்தை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய பார்த்த காமெடி நடிகர்.!

Simbu santhanam
Simbu santhanam

Santhanam : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் காமெடியால் மக்களை அதிகம் சிரிக்க வைத்த நிகழ்ச்சிகளில் லொள்ளு சபா நிகழ்ச்சியும் ஒன்று இந்த லொள்ளுசபா நிகழ்ச்சியில் எவ்வளவு பெரிய சீரியஸான திரைப்படமாக இருந்தாலும் அதனை ஸ்கூப் செய்து காமெடியாக மாற்றி ஒளிபரப்பி வந்தார்கள். இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சிரிக்க வைத்தது இந்த நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் சந்தானம், லொள்ளு சபா மனோகர், சுவாமிநாதன், யோகி பாபு, என பல நட்சத்திரங்கள் நடித்து வந்தார்கள். இப்படி சின்னத்திரையில் நடித்து வந்த இவர்கள்தான் இன்று வெள்ளித்திரையில் காமெடியில் கலக்கி கொண்டிருக்கிறார்கள். அதிலும் சந்தானம் தற்பொழுது படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.

லொள்ளு சபா நிகழ்ச்சியில் சந்தானத்துடன் நடித்த சுவாமிநாதன் கவுண்டமணி பற்றிய ஒரு தகவலை தற்பொழுது கூறியுள்ளார் அதாவது மன்மதன் திரைப்படத்தில் சந்தானத்திற்கு வாய்ப்பு கொடுத்தது சிம்பு தான் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் காமெடி நடிகர் கவுண்டமணி சந்தானத்திற்கு எதற்கு வாய்ப்பு கொடுக்குற அவர் எத்தனை படங்களை கலாய்த்து கிண்டல் செய்து வீடியோ போட்டுட்டு இருக்கான்.

நாம எவ்வளவு கஷ்டப்பட்டு படங்களை எடுக்கிறோம் ஆனால் இவனுங்க ஈசியா கிண்டல் செய்து கிரியேட் பண்ணி போடுறாங்க. அதனால் இவனுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என சிம்புவிடம் கவுண்டமணி கூறியுள்ளார். ஆனால் சிம்புவுக்கு சந்தனத்தை மிகவும் பிடிக்கும் அது மட்டும் இல்லாமல் சந்தனத்திற்கு வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக பெரிய ஆளாக வருவார் என எண்ணி சிம்பு இந்த திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

மன்மதன் திரைப்படத்தில் கவுண்டமணி காட்சியை ரசிகர்கள் ரசிக்கிறார்களோ இல்லையோ சந்தானத்தின் அனைத்து காட்சிகளையும் ரசித்தார்கள் அது மட்டும் இல்லாமல் பாடத்தின் நீளத்தை குறைப்பதற்காக கவுண்டமணி காட்சிகளை வெட்டினார்கள் சந்தானத்தின் காட்சிகளை அப்படியே வைத்து விட்டார் சிம்பு. ஏனென்றால் சந்தனத்தின் காட்சி ரசிக்கும் படியாக அமைந்துள்ளதாக அப்பொழுது சிம்பு கூறியதாக தற்பொழுது கூறியுள்ளார் லொள்ளு சபா சுவாமிநாதன்.

சந்தானம் மன்மதன் திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கினார் ஒரு கட்டத்திற்கு மேல் காமெடியானாக நடிப்பதை நிறுத்திவிட்டு ஹீரோவாகன் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் சமீபத்தில் டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படமும் வெளியாகி திரையரங்கில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

swaminathan lollu sabha
swaminathan lollu sabha