ஹீரோயின் ஆம்பள மாதிரி இருக்கு.? அடுத்த 50 நாளைக்கு நீ அவங்க கூட தான் நடிக்கணும்.. கிண்டடில்லத கவுண்டமணி.! அந்த நடிகை யார் தெரியுமா.?

goundamani-
goundamani-

தமிழ் சினிமாவில் இன்று  எத்தனையோ காமெடி நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழுபவர் காமெடி மன்னன் கவுண்டமணி. இவர் 80, 90 காலகட்டங்களில் தொடர்ந்து வெற்றி படங்களில்  நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார். காமெடி நடிகர் கவுண்டமணி பல ஹீரோக்களின் படங்களில் நடித்தாலும்..

அதிகமாக நடிகர் சத்யராஜ், கார்த்தி போன்றவர்களுடன் கவுண்டமணி படம் பண்ணினார். மேலும் இவர்களுடன் நெருங்கிய  நட்பு வட்டாரத்தில் கவுண்டமணி இருந்ததால் ஒரு சில விஷயங்களை வெளிப்படையாக பேசிக்கொள்வார்கள்.   இதனால் சத்யராஜ், கார்த்திவுடன் கவுண்டமணி இருக்கும்பொழுது அந்த சூட்டிங் ஸ்பாட் செம கலகலன்னு இருக்குமாம்..

அப்படி ஒரு தரமான சம்பவத்தை தான் இப்போ பார்க்க இருக்கிறோம்.. நடிகர் சத்யராஜ் கதாநாயகனாக நடித்த தங்கம் திரைப்படத்தில் கவுண்டமணி காமெடியன்னாக நடித்துள்ளார். ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது சத்யராஜ் ஹீரோயின் உடன் நடித்த காட்சியை கவுண்டமணி அமைதியாக உட்கார்ந்து பார்த்தாராம்..

அந்த காட்சியை படமாக்கப்பட்டு முடிந்த பின்னர் சத்யராஜை அழைத்து, அடுத்த 50 நாளைக்கு நீ ஒரு ஆம்பள கூட தான் நடிக்கணும்னு சொன்னாராம் இதற்கு சத்யராஜ் ஆமா அண்ணே நீங்களும் ஆம்பள தானே என சொல்ல உடனே அட நான்  ஹீரோயின சொன்னேன்.. அந்த பொண்ணு பார்க்க ஆம்பள மாதிரி தான் இருக்கார்னு சொல்லிவிட்டாராம். அந்த நடிகை வேறு யாரும் அல்ல..

மலையாளத்தில் பிரபலமான மேக்னா நாயர் தான் தங்கம் படத்தில் சத்யராஜிக்கு ஹீரோயின்னாக நடித்திருந்தார் அந்த நடிகை தான் கவுண்டமணி ஆம்பள மாதிரி இருக்குன்னு சொன்னார் இந்த தகவலை நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறினார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

thangam movie
thangam movie