அந்த பங்களா என்ன விலைன்னு கேளு.. காமெடி நடிகர் கவுண்டமணியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.?

goundamani
goundamani

தமிழ் சினிமா உலகில் தற்பொழுது எத்தனையோ காமெடி நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கவுண்டமணி. இவர் பொள்ளாச்சியில் உள்ள வல்லகொண்டபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.

தற்பொழுது கவுண்டமணிக்கு 84 வயதாகுவதால் வயது முதிர்வின் காரணமாக படங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.. இருப்பினும் ஒன்னு ரெண்டு பட வாய்ப்புகள் தேடி வருகின்றன அதன்படி தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் மேலும் சிவக்கார்த்திகேயனுடன் கைகோர்த்து ஒரு படத்தில் பெரியப்பா  கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட கவுண்டமணி நாம் அவ்வளவு எளிதில் நேரில் சந்தித்து விட முடியாது இவரை பார்க்கவும் முடியாது அந்த அளவிற்கு தனிமையை விரும்புகிறார். இவர் முதலில் நாகேஷ் ஹீரோவாக நடித்த சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் கார் டிரைவராக சின்ன ரோலில் நடித்தார் அதன் பிறகு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வந்தார். மேலும் செந்திலும் இவரும் நடிக்கும் காமெடிகள் பெரிய அளவில் பிரபலமாகின இதனால் கவுண்டமணியின் மார்க்கெட் விண்ணை தொட்டது.  அதன் காரணமாக டாப் நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கி அசத்தினார்.

கவுண்டமணியின் உண்மையான பெயர் சுப்பிரமணி  சுருக்கி மணி என கூப்பிட்டு வந்தனர் பிறகு சினிமாவில் இவருடைய கவுண்டர் காமெடி சிறப்பாக இருந்ததால் கவுண்டமணி என பெயர் எடுத்தார். இப்படி உருவான கவுண்டமணியின் சொத்து மதிப்பு தற்பொழுது சுமார் 40, 50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.