நடிகர் கவுண்டமணி தற்பொழுது எப்படி இருக்கிறார் என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி அதுமட்டுமில்லாமல் அப்போதைய காலகட்டத்தில் கவுண்டமணி-செந்தில் இல்லையென்றால் படத்தை கூட மக்கள் பார்க்க மாட்டார்கள் அந்த அளவு மிகவும் பிரபலமாக இருந்தார்கள்.
கவுண்டமணி செந்தில் காமெடி என்றாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வயிறு குலுங்க குலுங்க சிரித்து பார்ப்பார்கள். தங்களுடைய நகைச்சுவையால் மக்களை கட்டிப்போட்டவர். இவர்கள் தற்பொழுது நடிக்கவில்லை என்றாலும் இன்னும் இவர்கள் காமெடி மூலம் மக்களை சிரிக்க வைத்து வருகிறார்கள். முன்னணி நடிகர்களான கமல், ரஜினி ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு கவுண்டமணி நாடக மேடையில் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார் அதன் பிறகு படிப்படியாக சினிமாவில் நுழைந்து பின்பு தனியாக படங்களில் ஜொலிக்க ஆரம்பித்தார். அதன் பிறகுதான் செந்திலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். கவுண்டமணி இருந்தால் பல திரைப்படங்களில் செந்தில் இருப்பார் இதை அனைவரும் பார்த்திருப்போம்.
கவுண்டமணி சினிமாவில் நடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது இந்த நிலையில் தனுஷ் அவர்கள் கவுண்டமணியை வைத்து படம் இயக்கப்போவதாக சமூகவலைதளத்தில் ஒரு தகவல் காட்டுத் தீ போல் பரவி வந்தது. இந்த நிலையில் கவுண்டமணிக்கு சக்கரை நோய் இருப்பதால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை உடலில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால் தான் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்.
சமீபகாலமாக கவுண்டமணி ஒரு சில விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார் அந்தவகையில் பிரபலம் ஒருவரின் திருமண விழாவிற்கு கவுண்டமணி வந்துள்ளார் அப்பொழுது கைத்தாங்கலாக கவுண்டமணியை கூட்டி சென்று உள்ளார்கள் அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதை பார்த்த ரசிகர்கள் பலரும் கவுண்டமணிக்கு என்னாச்சு அவருக்கு உடலுக்கு என்ன ஏதாவது பிரச்சனையா என பலரும் பதற்றத்துடன் கேட்டார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கவுண்டமணி தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் ஐசரி வேலன் முப்பத்தி ஐந்தாவது நினைவு தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை அடையாற்றில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் அவருடைய திருவுருவச் சிலை திறப்பு விழா நடைபெற்றுள்ளது இந்த விழாவில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டு அந்த சிலையை திறந்து வைத்துள்ளார்.
Singaaara Velan singaaravelan..🎶🎶
It's good to see them both together after ages,my most favourite people🥵💥#KamalHaasan #Goundamani #Vikram #VikramFromJune3 pic.twitter.com/H9FrbE3nUl
— “ (@Rick_tweetz) May 14, 2022
அப்பொழுது நடிகர் கமலஹாசன் உடன் கவுண்டமணி அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார்கள் கவுண்டமணி அவர்கள் மேடையில் அப்பொழுது பேசியுள்ளார் அந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.