Goundamani : 80, 90 காலகட்டத்தில் ஒரு திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் அந்த திரைப்படத்தில் கவுண்டமணி செந்தில் இருக்கிறார்களா என மக்கள் எதிர்பார்ப்பார்கள், ஏனென்றால் கவுண்டமணி செந்தில் இருந்தால் படம் அருமையாக இருக்கும் என மக்கள் அனைவரும் நம்பினார்கள் அந்த அளவு கவுண்டமணி செந்தில் புகழ் மேல் ஓங்கி நின்றது அப்பொழுது.
அதுமட்டுமில்லாமல் கவுண்டமணி செந்தில் இருவரும் இணைந்து நடித்தால் மிகப்பெரிய வெற்றி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் இருவரும் அடிக்கடி பல திரைப்படங்களில் தனித்தனியாக நடித்துள்ளார்கள். ஒரு காலகட்டத்தில் கவுண்டமணி திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார் ஆனால் மீண்டும் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி தற்பொழுது ஹீரோவாக களமிறங்க இருக்கிறார் இவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக இருக்கிறது இந்த திரைப்படத்திற்கு “ஒத்த ஓட்டு முத்தையா” என பெயரிட்டுள்ளார்கள். முழு நீள காமெடி படம் என்பதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் ஒரு சில ரசிகர்கள் இந்த முடிவை நீங்கள் முன்கூட்டியே எடுத்திருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, எதிர்நீச்சல் மாரிமுத்து, சிங்கம் புலி, ரவி மரியா, வையாபுரி என பல நகைச்சுவை நடிகர்கள் இணைந்துள்ளார்கள்.
முழு நீள நகைச்சுவை திரைப்படம் என்பதால் பல நகைச்சுவை நடிகர்கள் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.