வயிறு குலுங்க குலுங்க நம்மை சிரிக்க வைத்த கவுண்டமணியா இது.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.

goundamani

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில் முதன் முதலில் 1964ஆம் ஆண்டு தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கியவர் இவரை பலரும் நக்கல் நாயகன் என்று தான் அழைப்பார்கள். அந்த அளவு நகைச்சுவை செய்வதில் மிகவும் வல்லவர். அந்த காலகட்டத்தில் நடிகர் கவுண்டமணி செந்தில் இல்லையென்றால் படத்தை பார்க்க மாட்டார்கள் அந்த அளவு பெயர் போனவர்களில் ஒருவர் நடிகர் கவுண்டமணி.

அதுமட்டுமில்லாமல் இன்றைய தொலைக்காட்சிகளில் பழைய படம் ஒளிபரப்புகிறார்கள் என்றால் அதில் கவுண்டமணி செந்தில் இருப்பார்களா என பலரும் எதிர் பார்ப்பார்கள். இன்றைய இளம் காமெடி நடிகர்களுக்கு ஊக்கு துணையாக இருப்பவர் நடிகர் கவுண்டமணி செந்தில். கவுண்டமணி என்றால் நினைவுக்கு வருவது அவர்களின் காமெடிதான்.

அந்த அளவு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பங்கை வகித்தவர்கள் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். காமெடி நடிகராக மட்டுமல்லாமல் வில்லனாகவும் கலக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் குணசித்திர வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித் தனது ரசிகர் மன்றமே வேண்டாம் என கூறியவர் அதேபோல் நடிகர் கவுண்டமணி அவர்களும் ரசிகர் மன்றம் என்பது வேண்டாம் என கூறியவர்.

அவ்வளவு கம்பீரமாக இருந்த கவுண்டமணி தற்போது அவர் நிலைமையை பார்த்து பல ரசிகர்கள் பரிதாபப் படுகிறார் ஏனென்றால் சமீபத்தில் ஒரு திருமணவிழாவில் கவுண்டமணி, செந்தில், ராமராஜன் என மூன்று பேரும் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்கள் அதில் நடிகர் கவுண்டமணியை ஒருவர் கையைப் பிடித்துக்கொண்டு கூட்டி வருகிறார்.

பலரும் கவுண்டமணி எவ்வளவு நக்கலாக காமெடி செய்து வந்தார் அவருக்கா இந்த நிலைமை என வருத்தம் அடைந்துள்ளார்கள். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

goundamani
goundamani