தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் கமர்சியல் திரைப்படங்களாக இருப்பதால் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசிக்கின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக அயலான், பிரின்ஸ், மாவீரன் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. முதலாவதாக பிரின்ஸ் அயலான் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றன
இந்த படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் சிவகார்த்திகேயன் மார்க்கெட் மிகப்பெரிய ஒரு உச்சத்தை எட்டும் என தெரிய வருகிறது. இந்த படங்கள் ஒரு பக்கம் ரிலீஸ் ஆக மறுபக்கம் அவர் மாவீரன் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் புதிய பட வாய்ப்புகளும் சிவகார்த்திகேயனுக்கு குவிந்த வண்ணமே இருக்கிறது அந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் சேர்ந்து நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராகவும் ஹீரோவாகவும் வலம் வரும் கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு படத்தில் நடிக்க உள்ளார் அதுவும் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் இந்த பெரிய பட்ஜெட் திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணி நடிக்க உள்ளதாக ஒரு பக்கம் தகவல் வெளியாகி உள்ளது.
உண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் கவுண்டமணியை சந்தித்துள்ளதாகவும் ஒரு பக்கம் தகவல்கள் வெளி வருகின்றன.கவுண்டமணி சிவகார்த்திகேயனுடன் இணைவது உறுதி அது மாவீரன் திரைப்படம் அல்லது ராஜகுமார் பெரியசாமி இயக்கும் திரைப்படமா என்பதுதான் சரியாக தெரியவில்லை ஆக மொத்தத்தில் இந்த காம்போ இணைவது கிட்டத்தட்ட உறுதி தான் என கூறப்படுகிறது.