நடிகர் சரத்குமார் ஆள் பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்ததால் முதலில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கத்தான் அதிக வாய்ப்பு கிடைத்தது பின் தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டு ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்தார். அதன்பின் நடிகர் சரத்குமார் ஒவ்வொரு கதையும் நன்கு தேர்வு செய்து அதில் தனது திறமையை காட்டி நடிக்க ஆரம்பித்தார்.
அப்படி இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான். இவருடைய பல படங்கள் ரசிகர்களுக்கு பேவரைட் திரைப்படங்களாக இன்றும் இருக்கின்றன. சூரியவம்சம், சிம்மராசி, மாயி, பாட்டாளி, நாடோடி மன்னன் கூலி நட்புக்காக சொல்லிக் கொண்டே போகலாம் பல சிறந்த படங்களில் நடித்து வெற்றியை ருசித்தவர். காலங்கள் போக போக சரத்குமாருக்கு ஹீரோ வாய்ப்பு குறைய தொடங்கியது.
தற்போது சினிமா உலகில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களுக்கு சித்தப்பாவாக அப்பாவாக வில்லன் குணத்திர கதாபாத்திரம் போன்றவற்றில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் கூட விஜய்க்கு அப்பாவாக நடித்த வருகிறார் சரத்குமார் இது தவிர தெலுங்கிலும், தமிழிலும் பல்வேறு படங்களில் கமிட்டாகியும் இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சரத்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கவுண்டமணி பற்றி சில தகவல்களை பகிர்ந்து உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். கவுண்டமணி ஒரு என்சைக்ளோபீடியா எந்த படத்தைப் பற்றி கேட்டாலும் விளக்கமாகக் கூறுவார் அவர் தமிழை தாண்டி ஹாலிவுட், பாலிவுட் என எந்த படத்தை பற்றி கேட்டாலும் அசல்ட்டாக கூறுவார்.
ஏதாவது ஒரு காட்சியை பார்த்தால் இது அந்த படத்தில் வந்தது அந்த படத்தில் வந்தது என கரெக்ட்டாக கூறுவார். நடிகர், நடிகைகள் எந்தெந்த படத்தில் நடித்துகிறார்கள் அடுத்து எந்தெந்த படத்தில் நடிக்க போகிறார்கள் என்பதை கூட துல்லியமாக சொல்லுவார் கவுண்டமணி. மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் யாராவது டயலாக் சொன்னால் உடனே கவுண்டமணி கவுண்டராக் செய்வார்.
சூட்டிங் ஸ்பாட்டில் உடனுக்குடன் தனது சொந்த வசனங்களை அடுத்தடுத்து பேசும் திறமை அவரிடம் அதிகமாக இருந்தது அதேபோலத்தான் வடிவேலும் தனது உடல் மொழியின் மூலம் மற்றவர்களை சிரிக்க வைப்பார் இவர்கள் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தாலே கலகலப்பாகத்தான் இருக்கும் என கூறினார்.