80-90 காலகட்டத்தில் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் நடிகர் கவுண்டமணி. இவரின் நடிப்பு திறமை மற்றும் உடல் லாங்குவேஜ் சிறப்பாக அமைந்தது. இவ்வாறு பட்டி கெட்டியாகவும் பிரபலமடைந்த இவர் பல முன்னனி நடிகர்களின் படத்தில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
அந்த வகையில் 80 90 காலகட்டத்தில் வெளிவரும் அனைத்து படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வந்தார். இவர் நடிக்காத திரைப்படமே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு அமைந்தது. அந்த வகையில் செந்தில்-கவுண்டமணி இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகனது. அதோடு இவர்களின் ஜோடி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.
அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல காமெடி வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் ஒன்றுதான் வாழைப்பழம் தற்போது வரையிலும் இந்த காமெடி பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் செந்தில் சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கவுண்டமணி முழுவதுமாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவர் திரைப்படங்களில் நடிக்க வில்லை என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
கவுண்டமணி சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அந்தவகையில் சுமித்ரா மற்றும் செல்வி இவர்கள் இதுவரையிலும் கவுண்டமணி தான் தன்னுடைய அப்பா என்று காட்டிக்கொள்ளாமல் திரை உலகில் தலை காட்டாமல் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் சுமித்ரா சென்னை அடையாரில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பலருக்கும் உதவி செய்து வருகிறார்.