விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற வருகிறது அந்த வகையில் பல்லாண்டு காலங்களாக மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து கோபிநாத் அவர்கள் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.மேலும் இவர் பல ஹிட் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் பட்டிமன்ற பேச்சாளராக சில மேடைகளில் பேசியுள்ளார்.
இவருடைய பேச்சுத்திறமை பலரையும் வியக்க வைத்தது மேலும் நல்ல கருத்துள்ள விஷயங்கள் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் இதன் காரணமாக பல கல்லூரிகளில் இவரை கெஸ்ட்டாக அழைப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் மேலும் தற்பொழுதும் கூட இன்ஸ்டா பக்கத்தில் நல்லதா நாலு நல்ல விஷயம் என்பதில் நிறைய விஷயங்கள் கூறி வருகிறார்.
விஜய் டிவியில் தொகுப்பாளராக பல ஆண்டு காலங்களாக பணியாற்றி வரும் இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நிலையில் கோபிநாத் அவர்களின் மகள் மற்றும் மனைவி என அனைவரையும் நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் அவருடைய அண்ணன் குறித்து அவ்வளவா பெரிதாக நமக்கு தெரியாது.
அவருடைய அண்ணன் வேறு யாரும் இல்லை பிரபாகரன் சந்திரன் தான். அவரை நாம் பலருக்கும் தெரியும் அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கதாநாயகியின் அப்பாவாக நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து இந்த சீரியல் நிறைவடைந்த நிலையில் தற்பொழுது தமிழும் சரஸ்வதியும், பாரதிதாசன் காலனி போன்ற சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மேலும் கோபிநாத் மற்றும் அவருடைய அண்ணன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் அண்ணன் தம்பியா என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்.