விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எத்தனையோ சீரியல்கள் ரசிகர் மன்றத்தில் மிகவும் பிரபலம் அந்த வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக பார்க்கப்படுவது பாக்கியலட்சுமி சீரியல் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் கோபி திருமணம் செய்து கொண்ட பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார்.
அதன் பிறகு வரும் சிக்கல்களையும் பண தேவைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டு வருகிறார் கோபி இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி பாரில் இருந்து தனது நண்பரை வரவழைத்து விட்டு மூக்கு முட்ட குடித்துக் கொண்டிருக்கிறார் அவருடைய நண்பர் வந்தவுடன் அதற்குள் ஆரம்பித்து விட்டாயா என கேட்டுவிட்ட ஜூஸ் ஆர்டர் செய்து அதனை குடித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது கோபி தன் வாழ்க்கையை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார்.
அப்பொழுது ராதிகாவிடம் ஏதாவது பிரச்சனையா என அவருடைய நண்பர் கேட்க அதற்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை அவள் மென்மையானவள் நல்லவள் என புகழ்ந்து தள்ளுகிறார் கோபி. பின்பு நடந்த அனைத்தையும் கோபி கூறுகிறார் அதாவது கோபியின் அம்மா அப்பாவை தன்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோபியிடம் கட்டளையிட்டது. பாக்கியாவை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என அனைத்தையும் தன்னுடைய நண்பரிடம் கூறுகிறார்.
அது எப்படி சாத்தியம் என அவருடைய நண்பர் கேட்கிறார் உனக்கு புரியுது ஆனால் ராதிகாவிற்கு புரியவில்லை என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் நான் அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டேன் நான்ங்க இரண்டு பேரும் சந்தோசமாக இருக்கிறோம் ஆனால் அது பத்தாது என ராதிகா நினைக்கிறார் எங்களுடைய அம்மா அப்பா ராதிகாவை மருமகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார் அது எப்படி சாத்தியம் என கோபி தன்னுடைய நண்பரிடம் புலம்பி கொண்டிருக்கிறார்.
அதற்கு அவருடைய நண்பர் உனக்கு இதெல்லாம் நல்லா வேணும் பாக்கியாவை திருமணம் செய்து கொண்டு இருந்தப்ப இதெல்லாம் நீ ஒரு டைம் கூட புலம்பியதே கிடையாத ஆனால் இப்பொழுது அடிக்கடி புலம்பி கொண்டிருக்கிறாய் என கூறுகிறார். மேலும் கோபி பாக்கியா கேன்டின் திறப்பு விழாவிற்கு ராதிகா சென்றிருக்கிறார். அங்கே ஏன் என்னுடைய அப்பா அம்மா வரவேண்டும் என என்னிடம் கேட்கிறார் என கோபி தன்னுடைய நண்பரிடம் கூறுகிறார்.
தன்னுடைய நண்பரிடம் புலம்பி தள்ளிக் கொண்டிருக்கிறார் கோபி இது முடித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு போய் உறங்கி விடலாம் என கோபி வருகிறார் அப்பொழுது யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் நுழைகிறார் கோபி, அங்கு கோபியின் அப்பா ஹாலில் உறங்கிக் கொண்டிருக்கிறார் அவருக்கு தெரியாமல் எப்படியாவது உள்ளே போய்விடலாம் என நினைத்துக் கொண்டு லைட்டை போட்டு திரும்ப ஆப் பண்ணி வீட்டு மொபைல் லைட்டை அடித்துக் கொண்டு செல்கிறார் அப்பொழுது திடீரென எதிர்பாராத விதமாக ராதிகா வருகிறார்.
கோபியை பார்த்து ராதிகா ஏன் இவ்வளவு லேட் என கேட்க கோபி திரு திறு வென முழித்துக் கொண்டே பதில் சொல்கிறார் நீங்க ஏன் ஒரு மாதிரியாக பேசுகிறீர்கள் இன்னைக்கும் குடித்துக் கொண்டு வந்திருக்கீங்களா என கேட்க அதற்கு கோபி வீரபாண்டிய கட்டபொம்மன் போல் நடந்து காட்டி நான் குடிக்கலாம் இல்லை இங்க பார் ஸ்டடியாக நடக்கிறேன் எனக் கூறுகிறார் இதனால் ராதிகா சந்தேகப்பட்டு வாங்க படுக்கலாம் என கூற அதற்கு கோபி நான் பிரஷ்ஷப் ஆகி விட்டு வந்து படுக்கிறேன் அங்கு வந்தால் லைட் போடணும் மயூ எழுந்து கொள்வாள் அதனால் நான் இங்கேயே படுத்துக் கொள்கிறேன் ஒரு போர்வை மட்டும் கொடு என கேட்கிறார்.
உடனே ராதிகா போர்வை எடுத்துக் கொண்டு கொடுக்க அப்பாடா தப்பிச்சோம் என கோபி சோபாவில் படுத்து உறங்கிக் கொள்கிறார் மற்றொரு பக்கம் பாக்கியா இங்கிலீஷ் கிளாஸ் போக கிளம்பி கொண்டிருக்கிறார் அப்பொழுது ஈஸ்வரி சாரில் அமர்ந்து கொண்டிருக்க அவரிடம் பாக்யா நான் கிளாசுக்கு போயிட்டு வரேன் அத்தா எனக் கூற அதற்கு நீ எங்க வேணாலும் போ எனக்கென்ன எனக் கூற ஒருவழியாக ஈஸ்வரியை சமாளித்து கிளாசுக்கு கிளம்புகிறார் பாக்யா.
பின்பு கிளாசுக்கு சென்ற பாக்யாவை அனைவரும் பாராட்டுகிறார்கள் அதேபோல் பழனிச்சாமியும் பாக்கியாவை புகழ்ந்து தள்ளுகிறார் அதில் வெட்கப்பட்டு பாக்கியா சிரிக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது.