விஜய் டிவி சீரியல்களில் டி ஆர் பி யில் டாப்பில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி இந்த தொடர் குடும்பங்கள் மத்தியில் படும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் தற்போது கதையில் பலரும் எதிர்பார்த்த கோபியை பற்றிய உண்மைகள் தெரிய வந்த வண்ணம் இருக்கின்றன.
அப்படி பாக்யலக்ஷ்மி தொடரில் இன்றைய எபிசோடில் கோபியை ராதிகா வீட்டைவிட்டு தூரத்தையும் கோபி திரும்பத்திரும்ப ராதிகா வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்பதால் ராதிகா மிகவும் ஆத்திரமடைந்து பேசுகிறார் மேலும் அவரது மகள் மயூவையும் கோபியுடன் இனிமே பேசாதே எனவும் அதட்டுவதால் வேறுவழியின்றி கோபி தன் வீடு திரும்பியுள்ளார்.
அங்கு தனது குடும்பம் அனைவரும் ஒற்றுமையாக உட்கார்ந்து சாப்பிட்டு எழிலின் படம் ரிலீசை பற்றி பேசி மகிழ்ச்சியாக இருந்த வருகின்றனர் ஆனால் கோபி மட்டும் ராதிகாவை நினைத்து உருகி வருகிறார். இதனால் கோபியின் அம்மா ஈஸ்வரி ஏன் சோகமா இருக்கிற என்று கேட்டதற்கும் கோபி ஒன்றுமில்லை எனக்கு சாப்பாடு வேணாம் என எழுந்து போய் விட்டார்.
தன் கணவர் சோகமாக இருப்பதால் பாக்கியாவும் அவரை நினைத்து வருந்துவதால் பாக்கியாவின் இளையமகன் எழில் அம்மாவை சமாதானப்படுத்துகிறார். பின்பு கோபி தூங்கும்போது ராதிகாவிற்கு மெசேஜ் செய்கிறார் அப்பொழுது பாக்கியாவும் அதைப்பார்த்து யாருக்கு இந்த நேரத்தில் மெசேஜ் செய்வார் என்று யோசிக்கிறார்.
பின்பு கோபி தூங்கும்போது கோபிக்கு தெரியாமல் அவரது போனை திருட்டுத்தனமாக பாக்கியா எடுத்து ஆராய்கிறார் ஆனால் அதில் ஒன்றும் பாக்கியாவிற்கு தெரியவில்லை பின்பு கோபி எழுந்து என் போனை ஏன் எடுத்த என சண்டை போடுகிறார் இப்படி இன்றைய எபிசோடு நிறைவடைகிறது .