குடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய கோபி – விஸ்வரூபம் எடுத்த ஈஸ்வரி.! பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து நிகழும் சம்பவம்.

pakkiyalaxmi
pakkiyalaxmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் மக்கள் பலரின் வரவேற்ப்பை பெற்று ஃபேவரட் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் கதை களம் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி சிறப்பாக நகர்ந்து வருகிறது. இதனிடையே பாக்யாவின் கணவர் கோபி.

பாக்கியலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரை நீண்ட நாளாக ஏமாற்றி தனது கள்ளக்காதலி ராதிகாவிடம் பழகி வரும் செய்தி தற்போது சீரியலில் வெளிவர உள்ளது. மேலும் இந்தத் தொடரில் கோபியின் மனைவி மற்றும் அவர் தற்போது திருமணம் செய்துகொள்ள உள்ள ராதிகா இருவரும் நெருங்கிய தோழிகள் ஆனால் இருவரையுமே கோபி ஏமாற்றி வருகிறார் என்ற உண்மை தெரியாமல்..

பாண்டியன் ஸ்டோர் சீரியல் இரண்டும் இணைந்து மெகா சங்கமம் நடைபெற்றது அதில் கோபி பற்றி உண்மையை தெரிந்து கொண்ட மூர்த்தி ராதிகாவிடம் சென்று நீங்கள் அவர் குடும்பத்தைப் பற்றி விசாரியுங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளார் இதனால் மனம் குழம்பி ராதிகா கோபியிடம் உங்கள் குடும்பத்தை நான் பார்த்து ஆகவேண்டும்.

என்னை அழைத்துச் செல்லுங்கள் இல்லையெனில் போட்டோ காண்பியுங்கள் என வற்புறுத்திய நிலையில் கோபி குடித்துவிட்டு ராதிகா வீட்டிற்கு வந்து பாக்கிலட்சுமியுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை காண்பித்து இவர்தான் என்னோட மனைவி என கூறியுள்ளார் இதனால் டீச்சர் தான் உங்கள் மனைவியா என பெரிய ஷாக்கில் அதிர்ச்சியாகி உள்ளார்.

இப்படி என்னை ஏமாற்றி விட்டீர்களே என கதறி அழுது பின்பு ராதிகா இனிமேல் என் வீட்டிற்கு வராதீர்கள் என கோபியை விரட்டி அடித்துள்ளார் கோபி என்ன செய்வதென்று தெரியாமல் அவரின் வீட்டிற்கு சென்றபோது அங்கு கோபியின் அம்மாவும் குடித்துவிட்டு இந்த நேரத்தில் வரியே என அவரும் வீட்டை விட்டு வெளியே போ என துரத்தி விடுவது போற்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகி உள்ளது.