ராதிகாவின் மீது இருக்கும் ஆசையில் பாக்கியாவை கழட்டிவிட திட்டம் தீட்டும் கோபி..!

bakkiyalakshmi-1
bakkiyalakshmi-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு சீரியலாக அமைந்துள்ளதுதான் பாக்கியலட்சுமி சீரியல்.  இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ஆனது மிகவும் விறுவிறுப்பான கதை அம்சத்துடன் இருப்பதால் ரசிகர்கள் இதனை விரும்பி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் நேற்று நடந்த எபிசோடில் தனது கல்லூரி தோழியான ராதிகாவுடன் கோபி மிக நெருக்கமாக பழகி வந்தது பலருக்கும் தெரிய வந்துள்ளது. கோபி பாக்கியலட்சுமியின் கணவர் என்பதை ராதிகா ஒரு திருமண நிகழ்ச்சியில் தெரிந்துகொண்டார்.

அந்தவகையில் வெளிவந்த ப்ரோமோ வீடியோவில் ராதிகா கடும் கோபத்தில் இருப்பது மட்டுமல்லாமல் உங்கள் மனைவியுடன் நீங்கள் சந்தோஷமாக தான் வாழ்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதுமட்டுமல்லாமல் என்னுடைய வாழ்க்கையில் விளையாடாதீர்கள் என்று கோபியை உதறி சென்றுள்ளார்.

அதன்பிறகு ராதிகாவிடம் கோபி உருகி உருகி பேசியுள்ளார் இதனை ராதிகா நம்பி விட்டார் அதுமட்டுமில்லாமல் கோபி தன்னுடைய நண்பனிடம் எனக்கு ராதிகா தான் முக்கியம் அதற்காக நான் பாக்கியாவை விட்டு பிரிய கூட தயார் என்று கோபமாகப் பேசி உள்ளார்.

அந்த வகையில் ரசிகர்கள் ராதிகாவுக்கு உண்மை தெரிந்தால் பெரிய சம்பவம் நடக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம் ஆகையால் இனி பாக்கியாவிற்கு உண்மை தெரிந்தால் என்ன நடக்கும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.