ராதிகாவை வச்சி செய்யும் தாத்தா.. உச்சகட்ட கோபத்தில் கொந்தளிக்கும் கோபி.! இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..

radhika
radhika

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலம் இருந்து வருகிறது இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி தாத்தா ராதிகாவிடம் விடிந்ததும் காபி கேட்கிறார் ராதிகா இதோ கொண்டு வரேன் என செல்கிறார். அதற்குள் தாத்தா விடிஞ்சு எவ்வளவு நேரம் ஆயிடுச்சு என்கின்றார் அந்த சமயத்தில் கோபியும் அதான் கொண்டு வரேன்னு சொல்கிறாரே அப்புறம் என்ன பிரச்சனை என கேட்கிறார்.

உடனே தாத்தா நீ அந்த வீட்டில் வெயிட் பண்ணி இருக்கியா என திருப்பி கேட்கிறார். இந்த நிலையில் தாத்தா ராதிகா எடுத்துக் கொண்டு வந்த காபியை வாங்கிக்கொண்டு மதியம் என்ன சாப்பாடு என கேட்கிறார் நெய்சாய் தான் என ராதிகா கூற உடனே தாத்தா அதலாம் வேண்டாம். வத்தல் குழம்பு வைத்து புடலங்காய் கூட்டு வைத்து அப்பளம் பொரித்து வைத்து விடு என கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் தாத்தா வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்ற்றுமா என கூறுகிறார். உடனே ராதிகா ஆபீஸ்க்கு எப்ப போறது என கேட்கிறாள் அப்ப ஒன்னு பண்ணுமா ஆம்லெட்டை மட்டும் நான் போட்டுக்கிறேன் மத்ததெல்லாம் நீ பண்ணிடுமா என தாத்தா கூறுகிறார். உடனே ராதிகா எப்படியும் அந்த வீட்ல தான் சாப்பிட போறீங்க என கேட்க நோ நோ இன்னைக்கு நான் இங்கதான் சாப்பிட போறேன் என்கின்றார்.

உடனே ராதிகா கோபத்துடன் உள்ளே செல்கிறார் அங்கு கோபியிடம் தனது கோபத்தை காட்டுகிறார் பின்பு கோபி ராதிகாவை சமாதானம் செய்கிறார் சீக்கிரம் இதுக்கெல்லாம் முடிவு கட்டுறேன் என கூறுகிறார் பாக்யா வீட்டில் இருந்து செஞ்சாங்க நான் ஆபீஸ் போக வேணாமா எனக் கூற அந்த சமயத்தில் அங்கு வந்த இனியா எங்க அம்மாவும் வேலை பார்த்துகிட்டு தான் எல்லாத்தையும் செஞ்சாங்க என கடுப்பேத்துகிறார்.

உடனே கோபி உனக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் நான் செய்கிறேன். வெங்காயம் கட் பண்ணவா என கேட்டு சமாளித்து முயற்சி செய்கிறார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும். இந்த நிலையில் எழில் ஆபீஸில் இருந்து கொண்டு சதீஷ் இடம் எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொண்டிருக்கிறான். அப்பொழுது அமிர்தாவுக்கு போன் பண்ணும் பொழுது அங்கு வந்த வர்ஷினி போனை வாங்கி அமிர்தா போன் எடுக்க மாட்டாங்க உங்களுக்கும் எனக்கும் தான் கல்யாணம் என கூறுகிறார் அதனால் அதிர்ச்சி அடைகிறார்கள் அனைவரும்.

உடனே அமிர்தா வீட்டிற்கு போனீங்களா என எழில் கேட்க நான் எதுக்கு அங்க போறேன் சமாளிக்கிறார். இந்த நிலையில் சதீஷை அழைத்துக் கொண்டு எழில் நேரடியாக அமிர்தா ஊருக்கே கிளம்பலாம் என முடிவு செய்து கிளம்புகிறார்கள் இந்த பக்கம் செழியனையும் ஈஸ்வரியையும் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள்  ஜெனியும் செல்வியும் இதனை சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இதனால் பாக்கிய  சந்தேகப்படுகிறார் இந்த எபிசோடு முடிகிறது.