விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் ஒவ்வொரு சீரியலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் மக்களின் உள்ளம் கவர்ந்த சீரியலாக பார்க்கப்படுவது பாக்கியலட்சுமி சீரியல் இந்த சீரியலில் கோபி தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிபடுத்தி ஒட்டுமொத்த மக்களையும் தனது பக்கம் இழுத்து வருகிறார்.
இந்தநிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி குடித்துவிட்டு எல்லா உண்மையும் கக்கி விடுகிறார். மறுநாள் எழுந்ததும் என்ன நடந்தது என்றே தெரியாமல் இருக்கிறார் பின்பு வெளியில் வந்து கோபியிடம் இனிமேல் குடித்துவிட்டு வர வேண்டாம் என கெஞ்சி கூத்தாடுகிறார்கள். பாக்கியலட்சுமி சீரியலில் முழுக்க முழுக்க குடித்துவிட்டு உண்மை அனைத்தையும் பாக்கியா விடம் சொல்லிவிடுகிறார் மறுநாள் எழுந்ததும் போதை தெளிந்ததும் என்ன நடந்தது என்றே தெரியாமல் தவிக்கிறார்.
இவ்வளவு நேரமாகியும் ராதிகா போன் செய்யாமலிருப்பது கோபிக்கு சந்தேகத்தை எழுப்புகிறது அதனால் என்ன ஆனது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் கோபி. உடனே எழில் வருகிறார் எழில் வந்ததும் கோபியிடம் நேற்று பயங்கரமாக குடித்துவிட்டு வந்தீர்கள் அம்மா உங்களை காணும் என்று மிகவும் தவிர்த்துவிட்டார். உங்கள் மொபைலுக்கு போன் செய்தால் நீங்க குடித்து உள்ளதாக உங்கள் நண்பர் கூறினார் என்று சொல்ல வேற என்ன சொன்னான் என கோபி ஒரே பதட்டத்துடன் கேட்கிறார்.
ஆனால் இதில் வேறு எதுவும் கூறவில்லை என சொன்னதும் கோபிக்கு உயிரே வந்துவிட்டது மேலும் இதில் அம்மா உங்களை தேடி ரோட்டிலேயே நின்றால் உங்களுக்கு பிரச்சினை இருப்பது எனக்குப் புரிகிறது ஆனால் இதற்கு குடிப்பதுதான் தீர்வு கிடையாது அனைத்து பிரச்சனைகளையும் நீங்கள் சரி செய்ய வேண்டும் இப்படி குடித்து விட்டு வருவது எல்லாத்துக்கும் தீர்வாக இருக்காது என கூறினார் அதைக்கேட்ட கோபி மிகவும் வருத்தம் அடைகிறார்.
மேலும் கோபி இனிமேல் குடிக்க மாட்டேன் என கூறுகிறார். பிறகு மோர் குடித்தால் தலைவலி சரியாகி விடும் என கூறுகிறார் அப்பொழுது உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் எனக் கேட்கிறார் மற்றொரு பக்கம் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது சாப்பிட வரலையா எனக் கேட்கும் பொழுது பாக்கியா வருகிறார் என கூறி சமாளிக்கிறார்.
உடனே கோபி பாக்கியா விடம் காபி கேட்கிறார் சாப்பிடும் நேரத்தில் ஏன் காப்பி கொடுக்கப் போகிறாய் என சொல்ல கோபி முகம் சரியில்லை என ராமமூர்த்தி ஈஸ்வரி நினைக்கிறார்கள். அதன்பிறகு கோபி பாக்கிய விட மோர் கேட்கிறார் எழில் அதற்கு நிறைய தண்ணீர் கொடுங்கள் எனக் கூறுகிறார் என் பையன் வந்து இதெல்லாம் சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது என கோபி பாக்கிய விடும் சொல்கிறார். பின்பு நடந்ததை எல்லாம் கோபி பார்க்கும் பொழுது கோபிக்கு சந்தேகம் வருகிறது.
அமைதியாக காருக்கு கோபி சென்று அனைத்தையும் யோசித்து பார்க்கிறார் அதன்பிறகு அவருக்கு நினைவுக்கு வருகிறது எப்படி ராதிகா வீட்டிற்கு செல்ல அங்கே மயூரா இருக்கிறார். அப்பொழுது மயூரா ஏன் அம்மா கூட சண்டை என கேட்க அம்மா சிரிக்கவே இல்லை என மயூரா கூறுகிறார் அப்பொழுது அதெல்லாம் ஒன்றுமில்லை என கோபி சொல்ல ராதிகா வந்து மயூர இந்த பக்கம் வரச் சொல்கிறார் கோபி ஏன் என கேட்க உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா இப்படி எதுவும் நடக்காததுபோல் வீட்டிற்கு வந்து இருக்கீங்க என ராதிகா கேட்க கோபி என்ன நடந்தது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.
என்ன கேட்கப் போகிறார் என அனைவரையும் பரபரப்பாக இருக்க வைத்துவிடுகிறார்கள் சீரியலில் என்ன நடக்க போகிறது என்பதை அனைவரும் ஆவலுடன் பார்ப்பதற்கு இருக்கிறார்கள்.