விஜய் டிவியில் டிஆர்பி யில் தொடர்ந்து டாப்பில் இருந்து வரும் சீரியல் பாக்கியலட்சுமி தொடர். இதில் ஒரு குடும்பத்தில் நடக்கும் எதார்த்தமான விஷயங்களை எடுத்துரைக்கும் கதையாக அமைந்துள்ளன. அதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த குடும்பத்தையும் கவர்ந்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் ஒரு இல்லத்தரசி பெண்ணாக நடித்து வரும் பாக்கியலட்சுமி அவரது கணவர் ஏமாற்றி மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த செய்தி தெரிய வருகையில் பாக்கியா எடுத்த முடிவு பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பாக்கியலட்சுமி கோபிக்கு விவாகரத்தை கொடுத்து விட்டு வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.
ஆனால் கோபியோ பாக்யா இப்படி செய்தும் திருந்தாமல் வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகும் ராதிகாவை சந்தித்து பேசிக்கொண்டே இருக்கிறார். இதனை தெரிந்து கொண்ட கோபியின் அம்மா ராதிகா வீட்டிற்கு சென்று கண்ணா பின்னா என்று திட்டி உள்ளார். இருந்தாலும் ராதிகாவும் தற்போது கோபி பக்கம் சாய்ந்து வருவதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் தற்போது வந்த புரோமோவில் கோபி நடு ரோட்டில் ராதிகா கையை பிடித்துக் கொண்டு உனக்காக தான் என் குடும்பம் எல்லாத்தையும் தூக்கி எறிந்து விட்டு வந்து விட்டேன் நம்ம கல்யாணம் செய்து கொள்ளலாம் எனக் கூறுகிறார். ராதிகாவோ எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் நான் இன்னும் யோசிக்கணும் என சொல்லுகையில் கோபி நான் சாகுவதை தவிர வேறு வழியே இல்லை என்று கூற..
ராதிகா காத்திருங்கள் நல்லதே நடக்கும் என பேசி உள்ளார் இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் பரவி வருகின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள் வீட்டை விட்டு வெளியே துரத்தையும் இந்த கோபி இன்னும் திருந்தவில்லை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.