வாத்தி கம்மிங் நீ இனி ஒதுங்கிகோ குக்கூ வந்துடுச்சி பார்.! இணையதளத்தில் பட்டையை கிளப்பும் வீடியோ

kuk kuuku
kuk kuuku

சமீபத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது.

இப்பாடலை திரைப்பிரபலங்கள்,கிரிக்கெட் வீரர்கள், குழந்தைகள், ரசிகர்கள் உட்பட அனைவரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு  இப்பாடலை ட்ரெண்டாகி வந்தார்கள். இன்று வரையிலும்  இப்பாடல் அளவுக்கு வேறு எந்த பாடலும் ஹிட்டாகவில்லை.

ஆனால் தற்பொழுது ஒரு பாடல் வாத்தி கம்மிங் பாடலையே ஓவர்டேக் செய்து விடும் போல அந்த வகையில் ஆல்பம் சாங்கான குக்கூ குக்கூ பாடல் ரீசன்டாக ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

இப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் பாடியிருந்தார்.  இப்பாடல் ஆதி தமிழர்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து பாடப்பட்டுள்ளது.  அந்த வகையில் இப்பாடல் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் யூடியூப்பில் வெளியிடப்பட்டது.

அந்த வகையில் தற்போது வரையிலும் 46 மில்லியன் பார்வையாளர்களையும், 1.9 மில்லியன் லைக்குகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பல திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் இப்பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்து வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அந்தவகையில் நேற்று சின்னத்திரை நடிகை மைனா,ஆலியா மானசா ஆகியோர் நடனம் ஆடிய வீடியோ வைரல் ஆனது. இவர்களை தொடர்ந்து என்று நடிகை நஸ்ரியா நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.