வெளியானது லாஸ்லியா நடித்துள்ள கூகுள் குட்டப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

losliya
losliya

இலங்கையில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் லாஸ்லியா அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கண்களுக்கு தென்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட போட்டியாளரான கவினை உருகி உருகி காதலித்தார்.

அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டதால் லாஸ்லியா படங்களில் நடிப்பதில் பிஸியாகிவிட்டார்.  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது அதே போல் பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கை தமிழர் தான் தர்ஷன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதேபோல் பிக் பாஸ் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து விட்டார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது  இந்த நிலையில் கேஎஸ் ரவிக்குமார் அவர்களின் ஆர்கே செல்லுலாய்டு சார்பில் தயாராகும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் பிக் பாஸ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார் அதேபோல் கதாநாயகியாக பிக்பாஸ் லாஸ்லியா நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த இத்திரைப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் இந்த திரைப்படம் மலையாள திரைப்படத்தின் ரீமேக்.  மலையாளத்தில் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் ரீமேக்தான் கூகுள் குட் டப்பா  படத்தை சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கி வருகிறார்கள் படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஆர்வி ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜிப்ரான் இசையில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தை கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் கூகுள் குட் டப்பா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது  இந்த பஸ்ட் லுக் போஸ்டரில் லாஸ்லியா  புடவை கட்டிக்கொண்டு மிகவும் அழகாக போஸ் கொடுத்துள்ளார்.

இதோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.