“பொன்னியின் செல்வன்” படத்தை இத்தனை வருடங்கள் யாரும் எடுக்காமல் போனது நல்லது – மணிரத்தினம் பேட்டி.!

ponniyin-
ponniyin-

இயக்குனர் மணிரத்தினம் பல தடைகளை தகர்த்து எறிந்து ஒரு வழியாக பொன்னியின் செல்வன் என்கின்ற வரலாற்று நாவலை ஒரு வழியாக படமாக எடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார். முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கு முன்பாக பொன்னியின் செல்வன் படக்குழு.

படத்தின் போஸ்டர், டிரைலர், பாடல், டீசர் என்ன பலவற்றையும் வெளியிட்டு அசத்தியது அதனை தொடர்ந்து இப்பொழுது செய்திவாசிப்பாளர்களை சந்தித்தது அப்பொழுது இயக்குனர் மணிரத்தினத்திடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு  அவரும் விளக்கமாக பதில் கொடுத்துள்ளார். மணிரத்தினம் பேசியது  : எம்ஜிஆர், சிவாஜி நடித்த வரலாற்று படங்களில் உபயோகப்படுத்தும் ஆபரணங்கள் கிரேக்க நாட்டு நடப்பு முறையைச் சார்ந்தவை..

ஆனால் நான் நிறைய படித்து ஆராய்ச்சி செய்து தான் இந்த படத்தில் உபயோகப்படுத்தி இருக்கிறேன் சண்டைக்கு செல்லும் போது ஆபரணங்கள் இருக்காது. உங்களுக்கு மெட்டல் இல்லாமல் தோல் உடைகள் தான் இருக்கும் அதன்படி தான் இந்த படத்திலேயே பயன்படுத்தி இருக்கிறேன் இந்த படத்திற்கு வசனங்கள் முதலில் தூய தமிழில் தான் அமைக்க முடிவு செய்தோம் ஆனால் சரளமாக பேச முடியவில்லை உணர்வுகளையும் கொண்டுவர முடியவில்லை.

எனவே சுலபமாக பேசும் அளவிற்கு மாற்றிக்கொண்டோம் ஆனால் ஜெயமோகன் எழுதும் போது தூய தமிழில் தான் எழுதுவார் பொன்னியின் செல்வன் நானும் படித்திருக்கிறேன் அதிலிருந்து என்னுடைய விளக்கத்தை ஒரு காட்சிப்படுத்தி இருக்கிறேன் படம் எடுக்கும் வரை இத்தனை நாளுக்காக எல்லோரும் புத்தகத்தை படித்துவிட்டு எங்கே இருந்தார்களோ நானும் அங்கே தான் இருந்தேன்.

ஒரு படத்தில் கதையை சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லாமல்   இரண்டு பாகங்கள் எடுக்கலாம் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள் என்பது வரவேற்கத்தக்கது பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க அது வசதியாக அமைந்தது இதனை வருடங்கள் எடுக்காமல் இருந்தது சரி என்று தோன்றுகிறது இந்த படத்திற்காக நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் போது ஒவ்வொருவரையும்.

இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று நன்றாக யோசித்துதான் முடிவு செய்தேன். அதுவும் சரியாக வந்திருக்கிறது கல்கியின் இந்த கதைக்கு ஜெயமோகன், குமரவேல் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இன்னும் தயாரிப்பு பணிகள் மட்டுமே மீதம் இருக்கிறது. தொடர்ந்து பல விஷயங்களை மணிரத்தினம் பேசினார்.