Surya birthday : சுத்தலில் விட்ட நிறுவனங்கள்.. முதல் மாத சம்பளத்தில் சூர்யா செய்த நல்ல காரியம்.!

surya
surya

Surya : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வரும் சூர்யா. இவர் வருடத்திற்கு ஒரு நல்ல படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் தற்போது சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து “கங்குவா” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சுவாரசிய தகவல்கள் வெளிவருகின்றன அப்படி இவர் தான் படித்துவிட்டு வேலைக்கு சென்ற அனுபவத்தை குறித்து பேசி உள்ளார்.

1995ஆம் ஆண்டு நான் கல்லூரி படிப்பை முடித்தேன் கல்லூரி படிக்கும்போது முடித்தவுடன் உடனே வேலைக்கு செல்ல வேண்டும் என்ற முடிவு எடுத்திருந்தேன் முதல் கட்டமாக தொழிலை பற்றி தெரிந்துகொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டு சொந்த தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.

திருப்பூர் தான் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன் அங்கு சென்றது பொழுது மாமா இங்கு பணியன் சம்பந்தமான ஆடைகள் தான் உற்பத்தி செய்யப்படுகிறது சட்டையை தொடர்பான ஆடைகள் சென்னையில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன ஆகையால் அங்கேயே நீ பயிற்சி எடுத்தால் தான் சரியாக இருக்க வேண்டும் என்று சொன்னார்.

இதனை அடுத்து நான் சென்னையில் உள்ள ஒரு ஆடை தயாரிக்கும் நிறுவனத்திற்கு வேலைக்கு சேர சென்றேன். நான் சிவகுமார் மகன் என்றெல்லாம் சொல்லவில்லை எப்பொழுதும் போல வேலைக்கு ஆள் தரக்கூடிய ஒரு சாதாரணமானவனாக சென்று வேலை கேட்டேன் ஒரு நான்கு, ஐந்து சனிக்கிழமைகள் அலையவிட்டார்கள் பின்னர் எனக்கு வேலை கிடைத்தது.

முதல் மாத சம்பளம் கொடுக்க மாட்டோம் நீ எப்படி வேலை செய்கிறாய் என்பதை கவனிப்போம் அந்த வேலையில் எங்களுக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே உன்னை தொடர்ந்து பணி செய்ய அனுமதிப்போம் என்றனர் முதல் மாதம் எனக்கு சம்பளமாக அவர்கள் நிர்ணயித்தது 1200 ரூபாய் தான் முதல் சம்பளம் என்பதால் அதில் அம்மாவிற்கு சேலை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று கடைக்கு சென்றேன்..

ஆனால் அந்த சேலை 1256 ரூபாய் கையிலிருந்த சில்லறைகளை எடுத்து 1250 ரூபாய் சேர்த்து விட்டேன் கடையில் ஏதாவது சலுகைகள் கொடுங்கள் என்று சொல்லி அந்த சேலையை வாங்கி வந்தேன். கல்லூரியில் அவ்வளவு ஜாலியாக இருந்துவிட்டு வெளியே வந்து வேலைக்கு செல்லும் பொழுது நம்மை போன்ற பிறரிடம் போட்டி போடும்போது தான் என்னுடைய உண்மையான தகுதி என்ன என்பது தெரிந்தது என பேசினார்.