ரசிகர்களுக்கு நல்ல செய்தி.. இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கயுள்ளது.! எப்ப தெரியுமா.?

indian-2

சினிமாவில் ஒரு படம் எடுப்பது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். படத்தின் கதைக்கு ஏற்றவாறு மாதங்களும் ஆகலாம் அல்லது வருடங்களும் ஆகலாம் அதற்காக ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களும் நடிகர், நடிகைகளும் மற்றும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஒரு படத்தை எடுக்க மெனக்கெடுகிறார்கள்.

இப்படி எடுக்கப்படும் படம் பாதியிலேயே நின்று விட்டால் பண சிக்கலில் மாட்டி தப்பித்து விடும் அந்த வகையில் இந்தியன் 2 திரைப்படம் பிரமாண்ட  இயக்குனர் ஷங்கர் நடிகர் கமலை வைத்து எடுக்க அதிகம் ஆர்வம் காட்டினார் ஒருவழியாக இருவரும் இணைந்து படம் எடுக்க ஆரம்பிக்கப்பட்டது படத்தின் ஷூட்டிங்கில் சிறப்பாக போய்க் கொண்டிருந்த நிலையில் ஷூட்டிங்கில் செட் சரியாக போடாததால் படத்தில் பணியாற்றிய துணை இயக்குனர்கள், அசிஸ்டன்ட் கள் சிலர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது ஒரு கட்டத்தில் இந்த ஷூட்டிங் ஆரம்பிக்க முடியாமல் போனதால் நடிகர் கமல் அரசியலை நோக்கி நகர்ந்தார் இயக்குனர் ஷங்கரும் தற்போது தெலுங்கில் ராம்சரண் ஐ வைத்து ஒரு புதிய படத்தை எடுக்கிறார். ஆனால்  லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை எடுத்து ஆக வேண்டும் இதற்காக பல கோடி செலவு செய்து பாதியிலேயே விட்டதால் ஒரு கட்டத்தில் கோர்ட்டில் கேஸ் போட்டு ஆரம்பத்தில் பல சர்ச்சையான விவாதத்தில் முடிந்ததால் இனி இந்தியன் 2 படம் எப்பொழுது எடுக்கப்படும் என அனைவரும் பேச தொடங்கினர்.

சமீபத்தில் கேஸ் நடந்து ஒரு வழியாக சமரசமாகி உள்ளதால் வெகு விரைவிலேயே படம் எடுக்கப் போவதாக கூறி உள்ளனர் ஆனால் தற்போது கமல் “விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். மற்ற பிரபலங்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் போன்றவர்கள் மற்ற படங்களில் கமிட்டாகி ஓடிக்கொண்டிருப்பதால் தற்பொழுது படம் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது ஆனால் மிக விரைவிலேயே படத்தை எடுக்க லைக்கா நிறுவனம் அதிரடியாக இறங்கியுள்ளது.

indian-2
indian-2

அந்தவகையில் இந்தியன் திரைப்படம் இந்த வருடம் இறுதி அல்லது இந்த வருடம் ஆரம்பத்திலேயே இந்தியன் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கலாம் என கூறி உள்ளது இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக் போலீசாக நடித்து உள்ளார் ஆனால் தற்போது அவர் இல்லாததால் அவரது  ரோலில் மாற்றமா அல்லது வேறு யாரையாவது நடிக்க வைப்பார்கள் என்பது கேள்வி குறியாக இருக்கிறது.