இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தான் குட் பேட் அக்லி அஜித்தின் தீவிர ரசிகர் தான் இவர் அதனால் அஜித்தை எப்படி திரையில் கண்டால் ரசிகர்கள் ரசிபார்களோ அதேபோல் திரையில் செதுக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டும் இல்லாமல் முதல் நாள் வசூல் 30 கோடிக்கு மேல் தமிழகத்தில் வசூல் செய்தது அதேபோல் இந்திய அளவில் 60 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
அந்த வகையில் உலக அளவில் 90 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார் இதற்கு முன் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார் அந்த வகையில் மீண்டும் த்ரிஷா அஜித்துடன் இணைந்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
மேலும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து த்ரிஷா அவர்கள் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார் அதாவது படப்பிடிப்பின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் படத்தில் இருந்து நீக்கப்பட்ட சில காட்சிகளையும் பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://x.com/trishtrashers/status/1910926842548171249
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்